×

விஜயகாந்தை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி – காரணம் என்ன?

Edapadi palanisamy : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று காலை சந்திக்கவுள்ளார். நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட சில கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துள்ளன. பாமகவிற்கும், தேமுதிகவிற்கும் எப்போதும் ஒத்துவராது. அதனால்தான், பாமகவுக்கு கொடுத்த 7 தொகுதிகளை தேமுதிகவும் கேட்டது. ஆனால், இறுதியில் வேறு வழியின்றி 4 தொகுதிகளை ஏற்றுக்கொண்டது. அதன்பின்பு அதிமுகவின் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்தது. ஆனால், யாருக்கு எந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பதில்
 
விஜயகாந்தை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி – காரணம் என்ன?

Edapadi palanisamy : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தேமுதிக தலைவர் விஜயகாந்தை இன்று காலை சந்திக்கவுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்காக அதிமுக, பாஜக, தேமுதிக, பாமக உள்ளிட்ட சில கட்சிகள் மெகா கூட்டணி அமைத்துள்ளன. பாமகவிற்கும், தேமுதிகவிற்கும் எப்போதும் ஒத்துவராது. அதனால்தான், பாமகவுக்கு கொடுத்த 7 தொகுதிகளை தேமுதிகவும் கேட்டது. ஆனால், இறுதியில் வேறு வழியின்றி 4 தொகுதிகளை ஏற்றுக்கொண்டது. அதன்பின்பு அதிமுகவின் தொகுதி பங்கீடு முடிவுக்கு வந்தது.

ஆனால், யாருக்கு எந்த தொகுதிகள் ஒதுக்குவது என்பதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது. எந்த தொகுதியில் எந்த கட்சி போட்டியிடுவது என்பது குறித்து அதிமுக சார்பில் ஒரு பட்டியல் தயாரானது. ஆனால், அதை தேமுதிக ஏற்கவில்லை. பாமக போட்டியிடும் சில தொகுதிகளை தேமுதிக கேட்கிறது. எனவே, இறுதி பட்டியல் வெளியிடுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.

விஜயகாந்தை சந்திக்கும் எடப்பாடி பழனிச்சாமி – காரணம் என்ன?

அதைத் தொடர்ந்து, பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று காலை விஜயகாந்தை அவரின் வீட்டில் சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் பேசினார். அப்போது, தொகுதி பங்கீடு குறித்தே பேசப்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் சண்டை போட்டுக் கொண்டிருந்தால் சரி வராது. தேர்தலில் கூட்டணி அமைத்திருப்பதால் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்கிற ரீதியில் அவர் பேச அதை விஜயகாந்தும் ஏற்றுக்கொண்டதாக செய்திகள் வெளியானது. ஆனாலும், இன்னும் தேமுதிக தரப்பில் சமாதானம் அடையவில்லை எனத் தெரிகிறது.

இந்நிலையில், இது தொடர்பாக பேச எடப்பாடி பழனிச்சாமி விஜயகாந்தை இன்று காலை 10 மணிக்கு அவரின் வீட்டில் சந்தித்து பேசுகிறார். அதைத் தொடர்ந்து அதிமுகவின் அதிகாரப்பூர்வமான தொகுதி பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News