×

இசையமைக்க விடாமல் தடுக்கின்றனர் – பிரசாத் ஸ்டூடியோ மேல் இளையராஜா புகார் !

இசைஞானி இளையராஜா 40 வருடங்களாக இசையமைப்பதற்காகப் பயன்படுத்தி வரும் பிரசாத் ஸ்டூடியோவில் தன்னை இசையமைக்க விடாமல் தடுப்பதாக புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார். இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஸ்டூடியோ 1-ல் இசையமைத்து வருகிறார். இதற்காக பிரசாத் ஸ்டுடியோ அதிபர் எல் வி பிரசாத் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் தற்போதைய பிரசாத் ஸ்டுடியோவின் இயக்குநராக இருந்து அதை நிர்வகித்து வரும் எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத்த்துக்கு இதில் இணக்கம் இல்லை எனத்
 
இசையமைக்க விடாமல் தடுக்கின்றனர் – பிரசாத் ஸ்டூடியோ மேல் இளையராஜா புகார் !

இசைஞானி இளையராஜா 40 வருடங்களாக இசையமைப்பதற்காகப் பயன்படுத்தி வரும் பிரசாத் ஸ்டூடியோவில் தன்னை இசையமைக்க விடாமல் தடுப்பதாக புகார் ஒன்றைக் கொடுத்துள்ளார்.

இசைஞானி இளையராஜா கடந்த 40 ஆண்டுகளாக பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள ஸ்டூடியோ 1-ல் இசையமைத்து வருகிறார். இதற்காக பிரசாத் ஸ்டுடியோ அதிபர் எல் வி பிரசாத் அவருக்கு அனுமதி வழங்கியுள்ளார். ஆனால் தற்போதைய பிரசாத் ஸ்டுடியோவின் இயக்குநராக இருந்து அதை நிர்வகித்து வரும் எல்.வி.பிரசாத்தின் பேரன் சாய் பிரசாத்த்துக்கு இதில் இணக்கம் இல்லை எனத் தெரிகிறது.

நேற்று இளையராஜா தரப்பில் இருந்து அவரது உதவியாளர கஃபார் என்பவரிடம் இருந்து ’இளையராஜா இசையமைக்கும் பகுதியான ஸ்டூடியோ-1இல் சில மேசைகளைப் போட்டு சுமார் 20 கணினிகளை வைத்து வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இது இசையமைப்புப் பணிக்கு இடையூறாக உள்ளது. எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் ஸ்டூடியோவை அத்துமீறிப் பயன்படுத்தியுள்ளனர். இவ்வாறாகக் கணினிகள் வைக்கப்பட்டுள்ளதால் அங்கு இருக்கும் இசைக்கருவிகள் சேதமாக வாய்ப்புள்ளது’ என விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் இது சம்மந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News