×

பொண்டாட்டி இருக்க இன்னொருத்தி கேக்குதா… கணவன் தலையில் கிரைண்டர் கல்லை போட்ட மனைவி

கணவன் வேலைக்கு சென்ற இடத்தில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகித்த மனைவி அவரை கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள வெங்கல் பகுதியை சேர்ந்த வேலு ஒரு கட்டிடத் தொழிலாளி. இவர் வேலை செய்யும் இடத்தில் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளார் என இவர் மனைவி சந்தேகித்துள்ளார். இந்நிலையில் சம்பவ நாளன்று இது குறித்து வேலுவிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேலு மனைவி அடித்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டார். இதனால்
 
பொண்டாட்டி இருக்க இன்னொருத்தி கேக்குதா… கணவன் தலையில் கிரைண்டர் கல்லை போட்ட மனைவி

கணவன் வேலைக்கு சென்ற இடத்தில் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளதாக சந்தேகித்த மனைவி அவரை கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள வெங்கல் பகுதியை சேர்ந்த வேலு ஒரு கட்டிடத் தொழிலாளி. இவர் வேலை செய்யும் இடத்தில் வேறு ஒரு பெண்ணுடன் தகாத உறவு வைத்துள்ளார் என இவர் மனைவி சந்தேகித்துள்ளார்.

இந்நிலையில் சம்பவ நாளன்று இது குறித்து வேலுவிடம் கேட்டு சண்டை போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேலு மனைவி அடித்துவிட்டு உறங்கச் சென்றுவிட்டார். இதனால் கடுப்பில் இருந்த வேலுவின் மனைவி வேலுவை கொலை செய்ய முடிவு செய்தார்.

அதன்படி தூங்கிக் கொண்டிருந்த கணவன் வேலுவின் தலையில் கிரைண்டர் கல்லை தூக்கிப் போட்டு கொலை செய்தார். வேலு சம்ப இடத்திலேயே இறந்துவிட்டார். இதை கண்டு குழந்தைகள் அழுததால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து வேலு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உடனடியாக போலீஸாருக்கு இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டு வேலூவின் மனைவி கைது செய்யப்பட்டார்.

From around the web

Trending Videos

Tamilnadu News