×

மாணவிக்கு பிரியாணி கொடுத்து பலாத்காரம்; வீடியோ காட்டி டிரைவர் மிரட்டல்!

கம்பத்தில் டிரைவராக் வேலைபார்த்து வரும் நபர் ஒருவர் மாணவியை பிரியாணி கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கம்பம் மாலையம்மாள் புரத்தை சேர்ந்த சக்தி என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். சக்தி அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை இருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த மாணவி காதலை ஏற்காததால் அவ்வப்போது மிரட்டியும் வந்துள்ளார். இந்நிலையில் ஒருநாள் அந்த மாணவியை சக்தி வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்து சென்று பிரியாணி கொடுத்து உண்ணும் படி வற்புறுத்தியுள்ளார்.
 
மாணவிக்கு பிரியாணி கொடுத்து பலாத்காரம்; வீடியோ காட்டி டிரைவர் மிரட்டல்!

கம்பத்தில் டிரைவராக் வேலைபார்த்து வரும் நபர் ஒருவர் மாணவியை பிரியாணி கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கம்பம் மாலையம்மாள் புரத்தை சேர்ந்த சக்தி என்பவர் டிரைவராக வேலை செய்து வருகிறார். சக்தி அதே பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை இருதலையாக காதலித்து வந்துள்ளார். அந்த மாணவி காதலை ஏற்காததால் அவ்வப்போது மிரட்டியும் வந்துள்ளார்.

இந்நிலையில் ஒருநாள் அந்த மாணவியை சக்தி வலுக்கட்டாயமாக தனது வீட்டிற்கு அழைத்து சென்று பிரியாணி கொடுத்து உண்ணும் படி வற்புறுத்தியுள்ளார். மிரட்டலுக்கு பயந்து பிரியாணியை உண்ட அந்த மாணவி சிறிது நேரத்தில் மயங்கியுள்ளார்.

மாணவி மயங்கியதும் சக்தி அந்த மாணவியை பலாத்காரம் செய்துள்ளான். அதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார். மயக்கம் தெளிந்து மாண்வி எழுந்ததும் அந்த வீடியோவை காட்டி இதை குறித்து யாரிடமாவது சொன்னால் இணையத்தில் பதிவேற்றிவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இருப்பினும் அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறவே அவர்கள் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரின் அடிப்படையில் சக்தி மற்றும் இந்த சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த சக்தியின் பெற்றோரையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News