×

ரவுடியுடன் மனைவிக்குக் காதல் – கொதித்த கணவன் செய்த காரியம் ?

ரவுடியுடன் தன் மனைவிக்கு இருந்தக் கள்ளக்காதலை அறிந்த கணவன் ரவுடியின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது. திருச்சி, சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் வேலைகள் எதுவும் செய்யாமல் அந்த பகுதியில் அடிதடியில் ஈடுபட்டு வரும் ரவுடி. இதனால் அந்த பகுதியில் இவர் மிகப் பிரபலம். அதேப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விஜய் என்பவரின் மனைவியோடு இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் வெகு விரைவாகவே காதலாக மாற ஆரம்பித்துள்ளது. இதனை
 
ரவுடியுடன் மனைவிக்குக் காதல் – கொதித்த கணவன் செய்த காரியம் ?

ரவுடியுடன் தன் மனைவிக்கு இருந்தக் கள்ளக்காதலை அறிந்த கணவன் ரவுடியின் தலையில் கல்லைத் தூக்கிப்போட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியைக் கிளப்பியுள்ளது.

திருச்சி, சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர் வேலைகள் எதுவும் செய்யாமல் அந்த பகுதியில் அடிதடியில் ஈடுபட்டு வரும் ரவுடி. இதனால் அந்த பகுதியில் இவர் மிகப் பிரபலம். அதேப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விஜய் என்பவரின் மனைவியோடு இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் வெகு விரைவாகவே காதலாக மாற ஆரம்பித்துள்ளது.

இதனை அடுத்து இருவரும் அடிக்கடி வெளியே சுற்றுவதும், தனிமையில் சந்திப்பதும் என தங்கள் காதல் விளையாட்டுகளை நடத்தி வந்துள்ளனர். இதனை அறிந்த விஜய் தன் மனைவியைக் கண்டித்துள்ளார். ஆனால் இருவருமே அவரைக் கண்டுகொள்ளவில்லை. ஒரு கட்டத்தில் ஆனந்த் விஜய்யின் வீட்டுக்கே வந்து அவரது மனைவியை சந்திப்பதும் தனிமையில் இருப்பதும் என எல்லை மீறியுள்ளனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் வழக்கமாக ஆனந்த் தூங்கும் இடத்துக்கு சென்று அவர் தலையில் கல்லைப் போட்டுக் கொன்றுள்ளார். இதையடுத்து போலிஸார் விஜய்யைக் கைது செய்துள்ளனர். தவறான உறவுகளால் குடும்ப அமைப்பு சிதைவதும் உயிர்ப்பலிகள் நடப்பதும் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருவது வருத்தத்துக்குரிய விஷயமாக மாறியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News