×

கல்லூரி தோட்டத்தில் தாயும் தந்தையும் பிணமாகக் கிடந்த கொடூரம் – பின்னணி என்ன ?

பூந்தமல்லி அருகே தனியார் கல்லூரி தோட்டத்தில் கணவன் மனைவி இருவரும் பிணமாகக் கிடந்ததை பார்த்து அவர்களின் மகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பூந்தமல்லியில் உள்ள பாப்பான் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி ரேவதி. இத்தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். மாரிமுத்து அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் தோட்டத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன் தினம் வெகுநேரமாகியும் தாயும் தந்தையும் வீட்டுக்கு வராததால் கல்லூரி தோட்டத்துக்கு சென்ற 2 மகன்களும் கண்ட காட்சி அவர்களை
 
கல்லூரி தோட்டத்தில் தாயும் தந்தையும் பிணமாகக் கிடந்த கொடூரம் – பின்னணி என்ன ?

பூந்தமல்லி அருகே தனியார் கல்லூரி தோட்டத்தில் கணவன் மனைவி இருவரும் பிணமாகக் கிடந்ததை பார்த்து அவர்களின் மகன்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பூந்தமல்லியில் உள்ள பாப்பான் சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி ரேவதி. இத்தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். மாரிமுத்து அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில்  தோட்டத் தொழிலாளியாகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் வெகுநேரமாகியும் தாயும் தந்தையும் வீட்டுக்கு வராததால் கல்லூரி தோட்டத்துக்கு சென்ற 2 மகன்களும் கண்ட காட்சி அவர்களை உறைய வைத்துள்ளது. தோட்டத்தில் ரத்த காயங்களுடன் சடலமாகக் கிடக்க தந்தை மரத்தில் தூக்குமாட்டித் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் நடத்திய விசாரணையில் மாரிமுத்து ரேவதி நடத்தையின் மேல் கொண்ட சந்தேகத்தால் அவரைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

From around the web

Trending Videos

Tamilnadu News