×

போலீசாரை கெட்ட வார்த்தையில் திட்டியவர் கதியை பாருங்கள்…

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதோடு, விசாரணை செய்த போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபர் கை உடைந்த நிலையில் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கார் ஒன்று வேகமாக வந்து ஒரு ஆட்டோவின் மோதி, பின் சுவரில் மோதி நின்றது. போலீசார் அருகில் சென்று பார்த்த போது காரை ஓட்டியவர் மித மிஞ்சிய மது போதையில் இருந்தது தெரிய வந்தது. மேலும், அந்த நபர் போலீசாரை
 
போலீசாரை கெட்ட வார்த்தையில் திட்டியவர் கதியை பாருங்கள்…

குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியதோடு, விசாரணை செய்த போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டிய வாலிபர் கை உடைந்த நிலையில் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

நீலாங்கரை கிழக்கு கடற்கரை சாலையில் நேற்று அதிகாலை 2.30 மணியளவில் கார் ஒன்று வேகமாக வந்து ஒரு ஆட்டோவின் மோதி, பின் சுவரில் மோதி நின்றது. போலீசார் அருகில் சென்று பார்த்த போது காரை ஓட்டியவர் மித மிஞ்சிய மது போதையில் இருந்தது தெரிய வந்தது.

மேலும், அந்த நபர் போலீசாரை தரக்குறைவாக கெட்ட வார்த்தைகளால் பேசும் வீடியோ நேற்று வெளியானது. அப்போதே இன்னைக்கு இவருக்கு பூசை இருக்கு என பலரும் கருத்து தெரிவித்திருந்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்துவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், கை உடைக்கப்பட்டு கட்டுப்போட்ட நிலையில் அந்த நபர் நிற்கும் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. அசிங்கமாக பேசியதால் போலீசார்தான் அவரின் கையை உடைத்தனர். போலீஸ்கிட்ட வச்சிகிட்டா இப்படித்தான். இது தேவையா என நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவரின் பெயர் நவீன். திருவான்மியூரை சேர்ந்த இவரின் தந்தை வெளிநாட்டில் வியாபாரம் செய்கிறார். நவீன் பழங்களை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். இவரின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டதோடு, பல பிரிவுகளின் கீழ் போலீசார் இவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். எனவே, நவீன் சிறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News