×

ஒரே விடுதியில் மனைவியும்.. கள்ளக்காதலியும்.. இறுதியில் நேர்ந்த விபரீதம்

பணம் கேட்டு நச்சரித்த கள்ளக்காதலியை லாட்ஜில் வைத்து கொலை செய்து விட்டு மனைவியுடன் தப்பி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூரில் வசித்து வருபவர் அருளானந்தம். இவரின் மனைவி சுமதி. இவர் கடந்த 25ம் தேதி தனது மனைவி சுமதி மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் வேளாங்கண்ணியில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார். 27ம் தேதி அறை நீண்ட நேரம் பூட்டுக்கிடந்ததால் சந்தேகமடைந்த விடுதி மேலாளர் போலீசாருக்கு தகவல்
 
ஒரே விடுதியில் மனைவியும்.. கள்ளக்காதலியும்.. இறுதியில் நேர்ந்த விபரீதம்…

பணம் கேட்டு நச்சரித்த கள்ளக்காதலியை லாட்ஜில் வைத்து கொலை செய்து விட்டு மனைவியுடன் தப்பி சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூரில் வசித்து வருபவர் அருளானந்தம். இவரின் மனைவி சுமதி. இவர் கடந்த 25ம் தேதி தனது மனைவி சுமதி மற்றும் நாகை மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் வேளாங்கண்ணியில் ஒரு விடுதியில் அறை எடுத்து தங்கினார்.

27ம் தேதி அறை நீண்ட நேரம் பூட்டுக்கிடந்ததால் சந்தேகமடைந்த விடுதி மேலாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்ற போது அவருடன் வந்த அந்த பெண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். எனவே, அப்பெண்ணை கொலை செய்துவிட்டு இருவரும் தப்பி சென்றதை போலீசார் உறுதி செய்தனர்.

போலீசார் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அருணானந்தத்திற்கும், கவிதாவுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதைப்பயன்படுத்தி அருளானந்தத்திடம் கவிதா அடிக்கடி பணம் வாங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்துள்ளார். இதனால், அருளானந்தம் விரக்தி அடைந்தார்.

இதைத்தொடர்ந்து கவிதாவுடனான உறவையும், அவர் பணம் கேட்டு மிரட்டுவதையும் மனைவி சுமதியிடம் தெரிவித்தார். இதையடுத்து, இருவரும் சேர்ந்து கவிதாவை கொலை செய்வது என முடிவெடுத்தனர்.

அதன்படி கடந்த 27ம் தேதி வேளாங்கண்ணி லாட்ஜுக்கு அவரை அழைத்து சென்றார் அருளானந்தம். பேச்சுவார்த்தையில் ஒரு லட்சம் கொடுத்தால் நான் விலகி சென்றுவிடுகிறேன் என கவிதா கூறினார். இது கேட்டு அதிர்ச்சி அடைந்த அருளானந்தமும், சுமதியும் ஆத்திரத்தில் கவிதாவை தாக்கியுள்ளனர். இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு கவிதா அங்கேயே உயிரிழந்தார். இதையடுத்து, அறையை பூட்டிவிட்டு இருவரும் தப்பி சென்றுவிட்டது தெரியவந்தது.

தேடுதல் வேட்டையில் சுமதி மட்டும் போலீசாரிடம் சிக்கியுள்ளார். தலைமறைவாக உள்ள அருளானந்தத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News