×

13 வயது சிறுமி… 6 சிறுவர்கள்.. மாறி மாறி பாலியல் வன்கொடுமை…

சிறுமியை பார்ட்டிக்கு அழைத்து சென்று அவரின் ஆண் நண்பர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட மும்பை பகுதியில் உள்ள மலாட் எனும் இடத்தில் வசிக்கும் அந்த சிறுமியை அவரின் நண்பர்கள் லஹூகார் தாம்நகரில் நடைபெறும் பார்ட்டிக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது மது அருந்திய அவர்கள் சிறுமிக்கு மயக்க மருந்து குளிர்பானத்தை கொடுத்துள்ளனர். இதில் மயங்கிய சிறுமியை யாருமில்லாத இடத்திற்கு அழைத்து சென்று அனைவரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
13 வயது சிறுமி… 6 சிறுவர்கள்.. மாறி மாறி பாலியல் வன்கொடுமை…

சிறுமியை பார்ட்டிக்கு அழைத்து சென்று அவரின் ஆண் நண்பர்கள் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட மும்பை பகுதியில் உள்ள மலாட் எனும் இடத்தில் வசிக்கும் அந்த சிறுமியை அவரின் நண்பர்கள் லஹூகார் தாம்நகரில் நடைபெறும் பார்ட்டிக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது மது அருந்திய அவர்கள் சிறுமிக்கு மயக்க மருந்து குளிர்பானத்தை கொடுத்துள்ளனர்.

இதில் மயங்கிய சிறுமியை யாருமில்லாத இடத்திற்கு அழைத்து சென்று அனைவரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின் வீட்டின் அருகே விட்டு விட்டு சென்றுவிட்டனர். இரவு வெகுநேரம் கழித்து வந்த சிறுமியை அவரின் தாய் கடுமையாக திட்டியுள்ளார். ஆனால், பிரம்மை பிடித்தவர் போல் அந்த சிறுமி எதுவும் பேசமால் நின்றுள்ளார்.

அடுத்தநாள் காலை சிறுமிக்கு அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட மருத்துவரிடம் அவரின் பெற்றோர் அழைத்துசென்றுள்ளனர். மருத்துவமனையில் தனது ஆண் நண்பர்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததை சிறுமி தெரிவித்தார். இதுகேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதில் கொடுமை என்னவெனில் அதில் 4 பேர் 18 வயதுக்கும் கீழ் உள்ளவர்கள். எனவே, அவர்கள் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News