×

ஹோட்டலில் அதிகாலை தீ விபத்து.. 17 பேர் பலி.. பலர் படுகாயம்

டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். டெல்லி கரோல்பார்க் பகுதியில் அர்பில் பேலஸ் என்கிற ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டல் 4 அடுக்குகளையும், 40க்கும் மேற்பட்ட அறைகளையும் கொண்டது. இன்று அதிகாலை திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமள ஹோட்டல் முழுவதும் பரவ தொடங்கியது. அந்த ஹோட்டலில் 60க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, மீட்பு படையினருக்கும், தீயணைப்பு படையினருக்கும்
 
ஹோட்டலில் அதிகாலை தீ விபத்து.. 17 பேர் பலி.. பலர் படுகாயம்

டெல்லியில் உள்ள ஒரு ஹோட்டலில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டதில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள்.

டெல்லி கரோல்பார்க் பகுதியில் அர்பில் பேலஸ் என்கிற ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டல் 4 அடுக்குகளையும், 40க்கும் மேற்பட்ட அறைகளையும் கொண்டது. இன்று அதிகாலை திடீரென அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமள ஹோட்டல் முழுவதும் பரவ தொடங்கியது. அந்த ஹோட்டலில் 60க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது.

எனவே, மீட்பு படையினருக்கும், தீயணைப்பு படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து 40க்கும் மேற்பட்டோரை மீட்டுள்ளனர். காயமைடந்த பலரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்தில் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உயிரை காப்பாற்றிக்கொள்ள பலரும் மேலே இருந்து கீழே குதித்தனர்.

முதல் கட்ட விசாரணையில் தீ விபத்து 4வது மாடியில் ஏற்பட்டதாக தெரிகிறது. அதன்பின் தீ மெல்ல மெல்ல அடுத்த மாடிகளுக்கும் பரவியுள்ளது. மின் கசிவால் இந்த மின் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. ஹோட்டல் மேனேஜரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News