×

21 மாடிக் கட்டிடத்தில் இருந்து வீசப்பட்ட பச்சிளம்குழந்தை – சிக்காத மர்மநபர் !

மும்பை கண்டிவாலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டு இறந்துள்ளது. மும்பையின் புறநகர் பகுதிகளில் ஒன்றான கண்டிவாலி பகுதியில் லால்ஜி நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியக் கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து பெண் குழந்தை ஒன்று அடையாளம் தெரியாத நபரால் தூக்கி வீசப்பட்டுள்ளது. இதை அந்த கட்டிடத்தின் வாட்ச்மேன் பார்த்துள்ளார். இதில் அந்த குழந்தை இறந்துள்ளது. கொலையாளி யார் என்பது தொடர்பான விசாரணையை
 
21 மாடிக் கட்டிடத்தில் இருந்து வீசப்பட்ட பச்சிளம்குழந்தை – சிக்காத மர்மநபர் !

மும்பை கண்டிவாலி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து பிறந்த பச்சிளம் குழந்தை ஒன்று தூக்கி வீசப்பட்டு இறந்துள்ளது.

மும்பையின் புறநகர் பகுதிகளில் ஒன்றான கண்டிவாலி பகுதியில் லால்ஜி நகர் பகுதியில் குடிசை மாற்று வாரியக் கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தின் மாடியில் இருந்து பெண் குழந்தை ஒன்று அடையாளம் தெரியாத நபரால் தூக்கி வீசப்பட்டுள்ளது. இதை அந்த கட்டிடத்தின் வாட்ச்மேன் பார்த்துள்ளார். இதில் அந்த குழந்தை இறந்துள்ளது.

கொலையாளி யார் என்பது தொடர்பான விசாரணையை போலீஸார் நடத்தி வருகின்றனர். அந்த குடியிருப்பில் அமைந்துள்ள சிசிடிவி கேமராக் காட்சிகளைக் கொண்டும் ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

குழந்தையின் சடலத்தைக் கைப்பற்றிய போலிஸார் குழந்தை பிறந்து கொஞ்ச நேரமே ஆகியிருக்கும் எனக் கூறியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News