×

திருப்பதி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயம் – பக்தர்கள் அதிர்ச்சி

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான தங்க கிரீடங்கள் தொலைந்து போன விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருமலை – திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உள்ள உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கரிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் திடீரென மாயமாகியுள்ளனது. இதையடுத்து, தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு கோவில் கதவுகளை அடைத்து அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதை கண்டுபிடிக்க 6 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார்
 
திருப்பதி கோவிலில் 3 தங்க கிரீடங்கள் மாயம் – பக்தர்கள் அதிர்ச்சி

திருப்பதி தேவஸ்தானத்துக்கு சொந்தமான தங்க கிரீடங்கள் தொலைந்து போன விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமலை – திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான கோவிந்தராஜ சுவாமி கோவிலில் உள்ள உற்சவ மூர்த்திகளுக்கு அலங்கரிக்கப்படும் 3 தங்க கிரீடங்கள் திடீரென மாயமாகியுள்ளனது. இதையடுத்து, தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு கோவில் கதவுகளை அடைத்து அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட பலரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதை கண்டுபிடிக்க 6 தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

திருப்பதி கோவிலில் தங்க கிரீடங்கள் மாயமாகி உள்ள விவகாரம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News