×

பெண் மருத்துவரை சீரழித்த 4 பேர்… ஹைதராபாத்தில் நடந்தது இதுதான்!

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் வசித்து வந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். அதன்பின், மீண்டும் மருத்துவமனை செல்ல வேண்டும் எனக்கூறி கச்சிபௌலி நகரில் உள்ள தோல் மருத்துவமனைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இரவு 9.30 மணியளவில் டோல்கேட் அருகே அவரது இரு சக்கரவாகனம் பஞ்சர் ஆகியுள்ளது. இதனால் என்ன செய்வதெனத் தெரியாத
 
பெண் மருத்துவரை சீரழித்த 4 பேர்… ஹைதராபாத்தில் நடந்தது இதுதான்!

ஹைதராபாத்தில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத்தில் வசித்து வந்த கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி நேற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். அதன்பின், மீண்டும் மருத்துவமனை செல்ல வேண்டும் எனக்கூறி  கச்சிபௌலி நகரில் உள்ள தோல் மருத்துவமனைக்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இரவு 9.30 மணியளவில் டோல்கேட் அருகே அவரது இரு சக்கரவாகனம் பஞ்சர் ஆகியுள்ளது.

இதனால் என்ன செய்வதெனத் தெரியாத அவருக்கு லாரி ஓட்டுனர் ஒருவர் உதவி செய்வதாக சொல்லியுள்ளார். ஆனால் அதற்கு பிரியங்கா ஒத்துக்கொள்ளாத போதும் அவர் வலுக்கட்டாயமாக உதவி செய்ய முன்வந்துள்ளார். இதைப்பற்றி தனது சகோதரி ரம்யாவுக்கு செல்போனில் அழைத்து அவர் அறிவித்துள்ளார். அதன்பின் 9.45 மணிக்கு அவரின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி விட்டது.

பெண் மருத்துவரை சீரழித்த 4 பேர்… ஹைதராபாத்தில் நடந்தது இதுதான்!

அவர்கள் பதற்றமடைந்து உடனடியாக வந்து பார்த்தபோது டோல்கேட் அருகே அவரைக் காணவில்லை. அதன்பின் போலீசாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதேநேரம் அங்கிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு பாலத்தின் அருகே ஒரு எரிந்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. போலீசாரின் விசாரணையில் அது பிரியங்கா ரெட்டிதான் என்பது தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் ஹைதராபாத் மட்டுமில்லாமல் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என சமூக வலைத்தளங்களில் பலரும் பேசி வருகின்றனர்.

பெண் மருத்துவரை சீரழித்த 4 பேர்… ஹைதராபாத்தில் நடந்தது இதுதான்!

இதற்கிடையில் இந்த விவகாரத்தில் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 3 பேர் 20 வயதுக்கு கீழானவர்கள் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் முகமது பாஷா என்பவர் லாரி ஓட்டுனர். மற்ற மூவரும் க்ளீனர்கள் ஆவர். பிரியங்கா ரெட்டிக்கு உதவி செய்வது போல் நடித்து, அவர் எதிர்பார்க்காத நேரத்தில் வாயை பொத்தி அவரை அங்கிருந்து ஒரு மறைவான இடத்திற்கு இழுத்து சென்று 4 பேரும் கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அதன்பின், அவர் அணிந்திருந்த துப்பட்டாவால் அவரின் கழுத்தை இறுக்கி அவரை கொலை செய்துள்ளனர். அதன்பின் அவரது உடலை லாரியில் ஏற்றிச்சென்று  பாலத்தின் கீழே  பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக போலீசாரிடம் முகமது பாஷா வாக்குமூலம் அளித்துள்ளார்.

எனவே, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கை வலுத்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News