×

பெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல்

Psycho husband – வயிற்று வலியால் துடித்த ஒரு பெண்ணின் கருப்பையில் மோட்டார் சைக்களின் கைப்புடி இருந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் ஒரு பெண்ணுக்கு கடந்த சில வருடங்களாக வயிற்று வலி இருந்து வந்தது. ஆனால், மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் அவர் மருத்துவமனைக்கு செல்லவில்லை. ஆனாலும், சமீபத்தில் வயிற்று வலி அதிகமாகியதால் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரின் உடலை ஸ்கேன் செய்த
 
பெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல்

Psycho husband – வயிற்று வலியால் துடித்த ஒரு பெண்ணின் கருப்பையில் மோட்டார் சைக்களின் கைப்புடி இருந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப்பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் வாழ்ந்து வரும் ஒரு பெண்ணுக்கு கடந்த சில வருடங்களாக வயிற்று வலி இருந்து வந்தது. ஆனால், மருத்துவ செலவுக்கு பணம் இல்லாததால் அவர் மருத்துவமனைக்கு செல்லவில்லை. ஆனாலும், சமீபத்தில் வயிற்று வலி அதிகமாகியதால் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒரு தனியார் மருத்துவமனைக்கு சென்றார்.

அங்கு அவரின் உடலை ஸ்கேன் செய்த மருத்துவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், அவரது கர்ப்பப்பையில் 6 இஞ்ச் அளவுக்கு ஒரு மோட்டார் சைக்கிளின் கைப்புடி இருந்தது. அறுவை சிகிச்சை செய்து அதை வெளியே எடுக்க ரூ.1 லட்சம் வரை செலவாகும் என தெரிவித்தனர்.

பெண் உறுப்பில் 6 இஞ்ச் பைக் கைப்புடி -சைக்கோ கணவனின் கொடூர செயல்

இதைத் தொடர்ந்து அப்பெண் தனது கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், 2 வருடங்களுக்கு முன்பு ஒரு சண்டை நடந்த போது ஒரு பைக் கைப்புடியை தனது பிறப்புறுப்பில் அழுத்து நுழைத்ததாகவும், இதுபற்றி யாரிடமும் கூறவில்லை எனவும் கூறினார். அதன்பின் அப்பெண்ணை அரசு மருத்துவமனையில் போலீசார் அனுமதித்தனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு கைப்பிடியை மருத்துவர்கள் அகற்றினர்.

அதன்பின் அப்பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்தனர். அப்பெண்ணுக்கு திருமணம் ஆகி 16 வருடங்கள் ஆகி 6 குழந்தைகள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News