×

7 மாத கர்ப்பினி தற்கொலை – பின்னணியில் கணவனும் கள்ளக்காதலியும் !

கேரளாவில் 7 மாத கர்ப்பிணியாக இருந்த ஐஸ்வர்யா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் கணவரும் அவரது கள்ளக்காதலியும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் பிஜு. கூலித்தொழிலாளியான இவர் தமிழகத்தில் உள்ள திருப்பூரில் கூலி வேலை செய்துவந்துள்ளார். அவரது மனைவி 7 மாதக் கர்ப்பிணியாக இருந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அவரது கணவர் பிஜு வரதட்சனைக் கேட்டு கொடுமைப்படுத்தியதுதான் காரணம் எனக் கண்டறியப்பட்டது. இந்நிலையில் தலைமறைவான பிஜூவை போலிஸார்
 
7 மாத கர்ப்பினி தற்கொலை – பின்னணியில் கணவனும் கள்ளக்காதலியும் !

கேரளாவில் 7 மாத கர்ப்பிணியாக இருந்த ஐஸ்வர்யா என்ற பெண் தற்கொலை செய்து கொண்டதன் பின்னணியில் கணவரும் அவரது கள்ளக்காதலியும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் பிஜு. கூலித்தொழிலாளியான இவர் தமிழகத்தில் உள்ள திருப்பூரில் கூலி வேலை செய்துவந்துள்ளார். அவரது மனைவி 7 மாதக் கர்ப்பிணியாக இருந்த நிலையில் திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அவரது கணவர் பிஜு வரதட்சனைக் கேட்டு கொடுமைப்படுத்தியதுதான் காரணம் எனக் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் தலைமறைவான பிஜூவை போலிஸார் தேடிக் கண்டு பிடித்துள்ளனர். அப்போதுதான் ஐஸ்வர்யாவின் மரணத்துக்கு பிஜு மட்டும் காரணமில்லை எனவும் அவரது கள்ளக்காதலியான மனோசாந்தி என்பவரும் காரணம் என்பது கண்டறியப்பட்டுள்ளது. மனோசாந்தியின் தூண்டுதலின் பெயராலேயே பிஜு ஐஸ்வர்யாவை வரதட்சணைக் கேட்டுக் கொடுமைப்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலிஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News