×

குடும்பத்தில் 9 பேர்.. விழுந்தது 5 ஓட்டு – சுயேட்சை வேட்பாளர் கதறல்

Independent Candidate crying – தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்களே தனக்கு வாக்களிக்கவில்லை என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கதறிய சம்பவம் நடந்துள்ளது. நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 350 இடங்களை பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. மோடியே மீண்டும் பிரதமர் பதவியில் அமர இருக்கிறார். இந்தியா முழுவதும் மொத்தம் 542 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் பல சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். ஆனால், வழக்கம் போல் அவர்கள் தோல்வியை தழுவினர். சுயேட்சைகள் மிகவும் குறைவான
 
குடும்பத்தில் 9 பேர்.. விழுந்தது 5 ஓட்டு – சுயேட்சை வேட்பாளர் கதறல்

Independent Candidate crying – தன்னுடைய குடும்பத்தில் இருப்பவர்களே தனக்கு வாக்களிக்கவில்லை என சுயேட்சை வேட்பாளர் ஒருவர் கதறிய சம்பவம் நடந்துள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 350 இடங்களை பெற்று பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கவுள்ளது. மோடியே மீண்டும் பிரதமர் பதவியில் அமர இருக்கிறார்.

இந்தியா முழுவதும் மொத்தம் 542 தொகுதிகளில் மக்களவை தேர்தல் நடைபெற்றது. இதில் பல சுயேட்சை வேட்பாளர்களும் போட்டியிட்டனர். ஆனால், வழக்கம் போல் அவர்கள் தோல்வியை தழுவினர். சுயேட்சைகள் மிகவும் குறைவான வாக்குகளை பெறுவது வழக்கமாக ஒன்றுதான். ஆனால், இதனால் ஒரு சுயேட்சை வேட்பாளர் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராஜஸ்தானில் நீத்து சட்டேன் வாலா என்பவர் ஜலந்தர் தொகுதியில் போட்டியிட்டார். முதல் சுற்றில் அவர் 5 வாக்குகள் பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டதும் அவர் கண்ணீர் விட்டு கதறி அழுட்தார். இதுபற்றி செய்தியாளர்கள் கேட்டதற்கு என் குடும்பத்திலேயே 9 பேர் இருக்கிறார்கள். ஆனால், நான் வெறும் 5 வாக்குகள்தான் பெற்றுள்ளேன். என் குடும்பத்தில் இருப்பவர்களே எனக்கு வாக்களிக்கவில்லை என கதறி அழுதார்.

இந்த சம்பவம் வீடியோவாக வெளியாகி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. உண்மையில் அந்த தொகுதியின் வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் 856 வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News