×

நடிகை ஷோபா கார் விபத்தில் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி

TV Acress Shobha – பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகை ஷோபா நேற்று இரவு ஏற்பட்ட கார் விபத்தில் பலியாகியுள்ளார். கன்னட தொலைக்காட்சி சீரியல் மகலு ஜானகியில் ‘மங்களா’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷோபா (45). இவருக்கு பல ரசிகர்கள் உண்டு. நேற்று அவர் தனது குடும்பத்தினருடன் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பானாசங்கரி கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். சித்ரதுர்கா அருகே அவர்கள் சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் நிலை தடுமாறிய கார்
 
நடிகை ஷோபா கார் விபத்தில் மரணம் – ரசிகர்கள் அதிர்ச்சி

TV Acress Shobha – பிரபல கன்னட தொலைக்காட்சி நடிகை ஷோபா நேற்று இரவு ஏற்பட்ட கார் விபத்தில் பலியாகியுள்ளார்.

கன்னட தொலைக்காட்சி சீரியல் மகலு ஜானகியில் ‘மங்களா’ என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஷோபா (45). இவருக்கு பல ரசிகர்கள் உண்டு. நேற்று அவர் தனது குடும்பத்தினருடன் பாகல்கோட் மாவட்டத்தில் உள்ள பானாசங்கரி கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தார். சித்ரதுர்கா அருகே அவர்கள் சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது.

இதில் நிலை தடுமாறிய கார் ஒரு லாரியின் மீது மோதியது. இதில், ஷோபாவோடு சேர்த்து அவரின் குடும்பத்தினர் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவரின் மறைவு கன்னட தொலைக்காட்சி நடிகை, நடிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் நடித்துக்கொண்டிருக்கும் சீரியலின் இயக்குனர் டி.என். சீதாராம் கூறுகையில் ‘எப்போதும் சிரித்துக் கொண்டே இருப்பார். மிகவும் திறமையானவர். அவர் மறைந்துவிட்டார் என்பது அதிர்ச்சியாக இருக்கிறது. “ என தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News