×

மூளைச்சாவு அடைந்த வாலிபர் – இறுதிச்சடங்கில் இன்ப அதிர்ச்சி

Brain dead person – மூளைச்சாவு அடைந்துவிட்டார் என மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட வாலிபர் உயிர் பிழைந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. தெலுங்கானா மாநிலம் பில்லமாரி கிராமத்தில் 18 வயதான வாலிபர் கந்தம் கிரண். இவர் கடந்த மாதம் 26ம் தேதி அதிக காய்ச்சல காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்கள் சிகிச்சைக்கு பின் அவரின் உடல் நிலை மோசமடைந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கடந்த 3ம் தேதி அவர்
 
மூளைச்சாவு அடைந்த வாலிபர் – இறுதிச்சடங்கில் இன்ப அதிர்ச்சி

Brain dead person – மூளைச்சாவு அடைந்துவிட்டார் என மருத்துவர்களால் அறிவிக்கப்பட்ட வாலிபர் உயிர் பிழைந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் பில்லமாரி கிராமத்தில் 18 வயதான வாலிபர் கந்தம் கிரண். இவர் கடந்த மாதம் 26ம் தேதி அதிக காய்ச்சல காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2 நாட்கள் சிகிச்சைக்கு பின் அவரின் உடல் நிலை மோசமடைந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

ஆனால், சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. கடந்த 3ம் தேதி அவர் கோமா நிலைக்கு சென்றதால், அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தனது மகனின் உயிர் தனது வீட்டிலேயே போகட்டும் என கருதிய அவரின் தாய் அவனது உடலை ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டு சென்றார்.

அதன்பின் அவனின் இறுதி சடங்கிற்கான பணிகளை தொடங்கினார். உறவினர்களும் வரவழைக்கப்பட்டனர். அப்போது திடீரென கிரணின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. இதைக்கண்டதும் அவனது தாய் இன்ப அதிர்ச்சி அடைந்து மீண்டும் அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் கிரண் உயிர் பிழைத்தான்.

மூளைச்சாவு அடைந்த வாலிபர் மீண்டும் உயிருடன் திரும்பியது மருத்துவர்களை மட்டுமில்லாமல் அப்பகுதி மக்களிடையேயும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News