×

பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் !

குறைப்பிரசவத்தில் 6 மாதத்தில் தனக்குப் பிறந்த குழந்தையை கொன்றுள்ள சம்பவம் கேரள மாநிலம் இடுக்கியில் நடந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கிப் பகுதியைச் சேர்ந்தவர் அந்தப் பெண். அங்குள்ள கட்டப்பனை அரசு கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் காதலின் விளைவாக அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார். இந்த தகவலை அறிந்த அவரின் காதலன் பயத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் காதலனின் இழப்பாலும் கர்ப்பத்தைக் கலைக்கும் வழி தெரியாமலும்
 
பிறந்த குழந்தைக்கு முதலில் தாய்ப்பால்.. பின்பு கழுத்தை நெறித்துக் கொலை – தாயின் கொடூரச் செயல் !

குறைப்பிரசவத்தில் 6 மாதத்தில் தனக்குப் பிறந்த குழந்தையை கொன்றுள்ள சம்பவம் கேரள மாநிலம் இடுக்கியில் நடந்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கிப் பகுதியைச் சேர்ந்தவர் அந்தப் பெண். அங்குள்ள கட்டப்பனை அரசு கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கும் அதேப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் காதல் மலர்ந்துள்ளது. இவர்கள் காதலின் விளைவாக அந்த பெண் கர்ப்பமாகியுள்ளார்.

இந்த தகவலை அறிந்த அவரின் காதலன் பயத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் காதலனின் இழப்பாலும் கர்ப்பத்தைக் கலைக்கும் வழி தெரியாமலும் மாணவி பதற்றத்தில் விடுதியிலேயே தங்கியுள்ளார். அதிர்ச்சியளிக்கும் விதமாக அவருக்கு 6 மாதத்திலேயே குழந்தைப் பிறந்துள்ளது. இதையடுத்துக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்த அவர் அதன் பின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துவிட்டு புத்தகப்பையில் மூட்டைக் கட்டியுள்ளார்.

அதன் பின் குழந்தையின் உடலை அப்புறப்படுத்துவதாக தோழியின் உதவியை நாடியுள்ளார். ஆனால் குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகித்த அவர் போலீஸுக்குத் தகவல் கொடுக்க அவர்கள் குழந்தையின் உடலைக் கைப்பற்றியுள்ளனர். பிரேதப் பரிசோதனையில் குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News