×

காஃபி டே அதிபர் தற்கொலை எதிரொலி-  தொழில் பூங்கா விற்பனை

காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா, கடந்த மாதம் கடன்சுமையால் தற்கொலை செய்துகொள்ள, அவரது சடலம் இரண்டு நாட்களுக்குப் பிறகு நேத்ராவதி ஆற்றில் பல மணி தேடலுக்குப் பின்பு கிடைத்தது. நிறுவனத்துக்கு இருந்த தீர்க்க முடியாத கடன் சுமையால்தான் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நிறுவனத்துக்கு உள்ள 6400 கோடி ரூபாய் கடனை அடைக்க அந்நிறுவனத்துக்கு சொந்தமாக பெங்களூவிரில் இருக்கும் தொழில் பூங்காவை விறபனை செய்ய அதன் இயக்குனர் குழு முடிவு செய்துள்ளது. அந்த பூங்காவை
 
காஃபி டே அதிபர் தற்கொலை எதிரொலி-  தொழில் பூங்கா விற்பனை

காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா, கடந்த மாதம் கடன்சுமையால் தற்கொலை செய்துகொள்ள, அவரது சடலம் இரண்டு நாட்களுக்குப் பிறகு நேத்ராவதி ஆற்றில் பல மணி தேடலுக்குப் பின்பு கிடைத்தது. நிறுவனத்துக்கு இருந்த தீர்க்க முடியாத கடன் சுமையால்தான் அவர் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் நிறுவனத்துக்கு உள்ள 6400 கோடி ரூபாய் கடனை அடைக்க அந்நிறுவனத்துக்கு சொந்தமாக பெங்களூவிரில் இருக்கும் தொழில் பூங்காவை விறபனை செய்ய அதன் இயக்குனர் குழு முடிவு செய்துள்ளது. அந்த பூங்காவை பிளாக்ஸ்டோன் நிறுவனம் மற்றும் உள்ளூர் நிறுவனமான சலர்பூரியா சாத்வா ஆகிய நிறுவனங்கள் இணைந்து வாங்க இருக்கின்றன. இதில் 90 சதவீத பங்குகள் பிளாக்ஸ்டோன் வசமும். எஞ்சிய 10 சதவீதத்தை சலர்பூரியா நிறுவனம் வைத்திருக்கும். இப்போது விற்பனையாகும் தொழில் பூங்கா தொழில்நுட்ப பூங்காவானது 120 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் மெபாசிஸ், மைண்ட்ரீ, அசெஞ்சர் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் அலுவலகங்கள் உள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News