×

படுக்கையைச் சுற்று ஆணுறை… தேநீரில் விஷம் – வித்தியாசமாகக் கணவனைக் கொன்ற மனைவி !

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனை மனைவி திட்டமிட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிட்ரா மாநிலம் தானே பகுதியில் வசித்து வருகின்றனர் பிரமோத் மற்றும் தீப்தி தம்பதியினர். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் இல்லற வாழ்க்கையில் உத்தவ் என்ற ஆளின் மூலம் புயல் வீசியுள்ளது. உத்தவ்வுக்கும் தீப்திக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த பிரமோத் தீப்தியைக் கண்டித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவரும் தங்கள் காதலை நிறுத்தவில்லை. ஒருக் கட்டத்தில் பிரமோத்தைக் கொலை
 
படுக்கையைச் சுற்று ஆணுறை… தேநீரில் விஷம் – வித்தியாசமாகக் கணவனைக் கொன்ற மனைவி !

மகாராஷ்ட்ரா மாநிலத்தில் கள்ளக்காதலுக்குத் தடையாக இருந்த கணவனை மனைவி திட்டமிட்டுக் கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிட்ரா மாநிலம் தானே பகுதியில் வசித்து வருகின்றனர் பிரமோத் மற்றும் தீப்தி தம்பதியினர். நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களின் இல்லற வாழ்க்கையில் உத்தவ் என்ற ஆளின் மூலம் புயல் வீசியுள்ளது. உத்தவ்வுக்கும் தீப்திக்கும் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையறிந்த பிரமோத் தீப்தியைக் கண்டித்துள்ளார்.

ஆனால் அவர்கள் இருவரும் தங்கள் காதலை நிறுத்தவில்லை. ஒருக் கட்டத்தில் பிரமோத்தைக் கொலை செய்ய திட்டமிட்ட இருவரும் அவர் குடிக்கும் தேநீரில் விஷம் கலந்து கொடுத்துள்ளனர். அதைக் குடித்த அவரும் வீட்டுக்குள்ளேயே இறந்துள்ளார். போலிஸ் விசாரணையில் தான் மாட்டிக்கொள்ளாமல் இருக்க அந்த தேநீர் கப்பில் தானும் தேநீர் குடித்தது போலக் காட்டிக்கொள்ள தன்னுடைய உதட்டுச் சாயத்தைப் பூசியுள்ளார். மேலும் பிரமோத்தின் படுக்கைக்கு அருகில் நிறைய ஆணுறைகளை ஒளித்து வைத்துள்ளார். பெண்கள் தொடர்பால் அவர் உயிரிழந்திருப்பதாகப் போலிஸார் நம்பிவிடுவர் என்பதற்காக.

ஆனால் போலிஸ் நடத்திய விசாரணையில் தீப்திதான் கொலையாளி என்பது நிரூபணமாகியுள்ளது. இதையடுத்து தீப்தி மீதும் அவர் காதலன் மேலும் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News