×

தில்லாக சிங்கத்தை எதிர்த்து நின்ற விவசாயி – வைரல் வீடியோ

Man scare lion – குஜராத்தில் தான் வளர்க்கும் மாடுகளை காப்பாற்ற சிங்கத்திடம் நேருக்கு நேர் சண்டைக்கு நின்ற முதியவரின் வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதிகளில் அதிக அளவில் சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றன. உணவுக்காக அவை அவ்வப்போது காடுகளை ஒட்டிய கிராமங்களில் நுழைந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு மற்றும் மாடுகளை கொன்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன. இந்நிலையில் அம்ரேலி பகுதியில் ஒருவர் வளர்க்கும் மாடுகளை ஒரு சிங்கம் விரட்டி வந்தது. அதைக்கண்ட அந்த
 
தில்லாக சிங்கத்தை எதிர்த்து நின்ற விவசாயி – வைரல் வீடியோ

Man scare lion – குஜராத்தில் தான் வளர்க்கும் மாடுகளை காப்பாற்ற சிங்கத்திடம் நேருக்கு நேர் சண்டைக்கு நின்ற முதியவரின் வீடியோ வைரலாகி வருகிறது.

குஜராத்தில் உள்ள கிர் வனப்பகுதிகளில் அதிக அளவில் சிங்கங்கள் வாழ்ந்து வருகின்றன. உணவுக்காக அவை அவ்வப்போது காடுகளை ஒட்டிய கிராமங்களில் நுழைந்து விவசாயிகள் வளர்க்கும் ஆடு மற்றும் மாடுகளை கொன்று சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளன.

இந்நிலையில் அம்ரேலி பகுதியில் ஒருவர் வளர்க்கும் மாடுகளை ஒரு சிங்கம் விரட்டி வந்தது. அதைக்கண்ட அந்த முதியவர் கையில் பிரம்புடன் நின்று கூச்சல் போட்டார். துணிச்சலுடன் சிங்கத்தை நோக்கி பிரம்பை வீசினார். எனவே, அவரை கண்டவுடன் சிங்கம் பயந்து திரும்பி ஓடிவிட்டது.

இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News