×

அதிக இடங்களில் திமுக ; ஆட்சி கவிழுமா? – பரபரக்கும் தமிழக அரசியல்

TN Polytics – தமிழகத்தில் நடந்து முடிந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அதிக இடங்களை பெறும் என வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் ஆட்சி கவிழ்ப்பை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மொத்தம் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பாக இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பில் திமுக 14 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் மீதமுள்ள 5 இடங்களில் இரண்டுக் கட்சிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களில்
 
அதிக இடங்களில் திமுக ; ஆட்சி கவிழுமா? – பரபரக்கும் தமிழக அரசியல்

TN Polytics – தமிழகத்தில் நடந்து முடிந்த 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக அதிக இடங்களை பெறும் என வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் ஆட்சி கவிழ்ப்பை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் மொத்தம் 22 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இது தொடர்பாக இந்தியா டுடே வெளியிட்ட கருத்துக்கணிப்பில் திமுக 14 இடங்களிலும் அதிமுக 4 இடங்களிலும் மீதமுள்ள 5 இடங்களில் இரண்டுக் கட்சிகளுக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தல்களில் அமமுக, மநீம, நாதக போன்ற கட்சிகளுக்கு எந்த வாய்ப்பும் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது.

அதிக இடங்களில் திமுக ; ஆட்சி கவிழுமா? – பரபரக்கும் தமிழக அரசியல்

இது ஆளும் அதிமுக அரசுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்களோடு சேர்த்து திமுகவுக்கு 89 எம்.எல்.ஏக்கள் உள்ள நிலையில், திமுகவின் பலம் கூடினால் கண்டிப்பாக சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவார்கள். அதோடு, நம்பிக்கை இல்லா தீர்மானம் நடந்தால் திமுகவோடு சேர்ந்து ஆட்சியை கவிழ்ப்போம் என அமமுக எம்.ஏல்.ஏக்கள் கூறியிருப்பதன் மூலம் ஆட்சி கவிழ்ப்பிற்கு நிறைய வாய்ப்புண்டு.

இது ஒருபுறம் எனில், பாராளுமன்ற தேர்தலில் 34 இடம் திமுகவுக்கு கிடைக்கும் என கருத்துக்கணிப்பு வெளியாகியது. மத்தியில் பாஜகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் போனால், நிச்சயம் திமுகவின் ஆதரவை பாஜக கோரும். ஏற்கனவே, வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் படி ஸ்டாலினிடம் அமித்ஷா டீல் பேசி வருவதாக கூறப்படுகிறது. அந்த சூழ்நிலை வந்தால் கண்டிப்பாக மத்தியில் திமுக அங்கம் வகிக்க வேண்டும் என்கிற கோரிக்கையோடு, ஆட்சி கவிழ்ப்பு பற்றியும் நிச்சயம் ஸ்டாலின் அமித்ஷாவிடம் பேசுவார்.

அதிக இடங்களில் திமுக ; ஆட்சி கவிழுமா? – பரபரக்கும் தமிழக அரசியல்

அமித்ஷாவை பொறுத்தவரை தமிழகத்தில் பாஜக காலூன்றுவதை விட மத்தியில் ஆட்சி அமைப்பதே தற்போது அவருக்கு முக்கியம். எனவே, திமுகவின் கண்டிஷன்களை கண்டிப்பாக அமித்ஷா ஏற்றுக்கொள்வார். அதோடு, எம்.எல்.ஏக்களின் பலத்தையும் இழந்து, எம்.பிக்களும் இல்லாமல் போகும்போது அதிமுகவோடு சேர்ந்து பயணிப்பதை பாஜகவும் விரும்பாது. எனவே, இதுவும் ஆட்சி கவிழ்ப்புக்கு இட்டு செல்லும்.

இதை அனைத்தையும் புரிந்தவர்தான் எடப்பாடி பழனிச்சாமி. எனவே, ஆட்சியை எப்படி தக்க வைத்துக்கொள்வது என்பதில் அவர் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.

எனவே, எப்படி பார்த்தாலும் நாளை தேர்தல் முடிவுகளுக்கு பின் அரசியலில் பல அதிரடி மாற்றங்கள் நிகழும்.

காத்திருப்போம்…!

From around the web

Trending Videos

Tamilnadu News