×

பசும்பாலில் தங்கமா ?– லோன் கேட்டு பைனான்ஸ் கம்பெனிக்கு சென்ற மனிதர் !

சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த திலிப் கோஷ் இந்திய பசுக்களின் பாலில் தங்கம் இருப்பதாக சொல்லி சர்ச்சையைக் கிளப்பினார். பாஜக தலைவர்கள் பசுக்களைப் பற்றி பல சர்ச்சையானக் கருத்துகளைப் பேசி வருகின்றனர். பசுவின் சிறுநீர் கேன்ஸரைக் குணப்படுத்தும் எனவும் சாணத்தில் மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் சொல்லி வருகின்றனர். இத்தகைய கருத்துகள் இணையதளங்களில் கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகின்றன. இந்நிலையில் சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜகவைச் சேர்ந்த முன்னணி தலைவர் திலிப் கோஷ் ‘ இந்திய
 
பசும்பாலில் தங்கமா ?– லோன் கேட்டு பைனான்ஸ் கம்பெனிக்கு சென்ற மனிதர் !

சமீபத்தில் பாஜகவைச் சேர்ந்த திலிப் கோஷ் இந்திய பசுக்களின் பாலில் தங்கம் இருப்பதாக சொல்லி சர்ச்சையைக் கிளப்பினார்.

பாஜக தலைவர்கள் பசுக்களைப் பற்றி பல சர்ச்சையானக் கருத்துகளைப் பேசி வருகின்றனர். பசுவின் சிறுநீர் கேன்ஸரைக் குணப்படுத்தும் எனவும் சாணத்தில் மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் சொல்லி வருகின்றனர். இத்தகைய கருத்துகள் இணையதளங்களில் கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜகவைச் சேர்ந்த முன்னணி தலைவர் திலிப் கோஷ் ‘ இந்திய பசுக்களின் பாலில் தங்கம் கலந்துள்ளது. அதனால்தான் அது மஞ்சள் நிறத்தில் உள்ளது. இது மற்ற நாட்டு பசுக்களில் இல்லை. அதனால்தான் பால் ஒரு சிறந்த நோய் தடுப்பு மருந்து. பாலை மட்டுமே குடித்து வேறு உணவு எதுவும் இன்றி ஒருவர் உயிர் வாழமுடியும்.’ எனப் பேசினார்.

திலிப் கோஷின் இந்த பேச்சு இணையவாசிகள் மத்தியில் கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் ஆளானது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் ஒருவர் தனது மாட்டை ஓட்டிக்கொண்டு மனப்புரம் நகைக்கடன் நிறுவனத்துக்கு சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த நபர் திலிப் கோஷின் பேச்சை நம்பி செய்தாரா அல்லது அவரைக் கேலி செய்வதற்காக அப்படி செய்தாரா என்பது தெரியவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News