×

வெளிநாட்டு பசுக்கள் ஆண்டிகள்… இந்திய பசுக்களின் பாலில் தங்கம் – பாஜக கண்டுபிடிப்பு

மாட்டுப்பாலில் தங்கம் கலந்திருப்பதாக மேற்கு வங்க பாஜக தலைவர் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. பாஜக தலைவர்கள் பசுக்களைப் பற்றி பல சர்ச்சையானக் கருத்துகளைப் பேசி வருகின்றனர். பசுவின் சிறுநீர் கேன்ஸரைக் குணப்படுத்தும் எனவும் சாணத்தில் மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் சொல்லி வருகின்றனர். இத்தகைய கருத்துகள் இணையதளங்களில் கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகின்றன. இந்நிலையில் சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜகவைச் சேர்ந்த முன்னணி தலைவர் திலிப் கோஷ் ‘ இந்திய பசுக்களின் பாலில் தங்கம்
 
வெளிநாட்டு பசுக்கள் ஆண்டிகள்… இந்திய பசுக்களின் பாலில் தங்கம் – பாஜக கண்டுபிடிப்பு

மாட்டுப்பாலில் தங்கம் கலந்திருப்பதாக மேற்கு வங்க பாஜக தலைவர் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

பாஜக தலைவர்கள் பசுக்களைப் பற்றி பல சர்ச்சையானக் கருத்துகளைப் பேசி வருகின்றனர். பசுவின் சிறுநீர் கேன்ஸரைக் குணப்படுத்தும் எனவும் சாணத்தில் மருத்துவ குணங்கள் உள்ளதாகவும் சொல்லி வருகின்றனர். இத்தகைய கருத்துகள் இணையதளங்களில் கேலிகளுக்கும் விமர்சனங்களுக்கும் உள்ளாகின்றன.

இந்நிலையில் சமீபத்தில் மேற்கு வங்கத்தில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜகவைச் சேர்ந்த முன்னணி தலைவர் திலிப் கோஷ் ‘ இந்திய பசுக்களின் பாலில் தங்கம் கலந்துள்ளது. அதனால்தான் அது மஞ்சள் நிறத்தில் உள்ளது. இது மற்ற நாட்டு பசுக்களில் இல்லை. அதனால்தான் பால் ஒரு சிறந்த நோய் தடுப்பு மருந்து. பாலை மட்டுமே குடித்து வேறு உணவு எதுவும் இன்றி ஒருவர் உயிர் வாழமுடியும்.’ எனப் பேசினார்.

இதையடுத்து திலிப் கோஷின் இந்த பேச்சுக்கு இணையவாசிகள் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News