×

என்னை காரில் இருந்து வெளியே இறக்கி.. டிரைவர் மீது நடிகை பகீர் புகார்

Actres Swastika dutta – வாடகை காரின் டிரைவர் தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக நடிகை கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்வஸ்திகா தத்தா. இவர் பெங்காளி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் வழக்கமான தனது படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வாடகை கார் மூலம் செல்வது வழக்கம். நேற்று காலை இவர் அதேபோல் ஒரு வாடகை காரில் சென்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இது தொடர்பாக தனது முகநூல்
 
என்னை காரில் இருந்து வெளியே இறக்கி.. டிரைவர் மீது நடிகை பகீர் புகார்

Actres Swastika dutta – வாடகை காரின் டிரைவர் தன்னிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக நடிகை கூறியுள்ள புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்வஸ்திகா தத்தா. இவர் பெங்காளி தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் வழக்கமான தனது படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வாடகை கார் மூலம் செல்வது வழக்கம். நேற்று காலை இவர் அதேபோல் ஒரு வாடகை காரில் சென்ற போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

என்னை காரில் இருந்து வெளியே இறக்கி.. டிரைவர் மீது நடிகை பகீர் புகார்

இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் ஒரு புகாரை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

இதுபோன்ற அனுபவம் இதுவரை எனக்கு நடந்ததில்லை. இன்று காலை படப்பிடிப்புக்கு செல்ல உபேர் கேபை புக் செய்தேன். ஜம்ஷெத் என்பவர் அந்த காரை ஓட்டி வந்தார். என் வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்றபின் நடுரோட்டில் டிரிப்பை கேன்சல் செய்துவிட்டு என்னை கீழே இறங்குமாறு கூறினார். நான் மறுத்து அவரிடம் வாக்குவாதம் செய்தேன்.
எனவே, காரை அவர் வேறு திசையில் ஓட்டி அவர் வசிக்கும் பகுதிக்கு சென்றார். என்னை கண்டபடி திட்டி கீழே இறங்க சொன்னார். நான் மறுத்ததும் என்னை வெளியே இழுத்தார். நான் கத்தினேன். என்னை மிரட்டினார். அவருக்கு தெர்ந்த ஆட்களை அழைத்தார். என் படப்பிடிப்பிற்கு நேரமாகி விட்டதால் அங்கிருந்து சென்றுவிட்டேன்’ எனக்கூறி அந்த கார் எண் அடங்கிய புகைப்படம், அந்த டிரைவரின் புகைப்படம், செல்போன் என அனைத்தையும் பதிவிட்டுள்ளார்.

இதையடுத்து அவரின் தந்தை காவல் நிலையத்தில் ஆதாரத்துடன் புகார் அளித்தார். இதனையடுத்து அந்த டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News