×

காதலிக்க மறுத்த பெண் – பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய கேரள வாலிபர் !

கேரளாவில் தன்னைக் காதலிக்க மறுத்த பெண் ஒருவரை இளைஞர் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது. கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நிதின் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் தங்கள் ஊருக்கு அருகே உள்ள காக்கநாடு எனும் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரை ஒருதலை பட்சமாகக் காதலித்து வந்துள்ளார். அவரிடம் பலமுறை தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த பெண் நிதினின் காதலை ஏற்கவில்லை எனத் தெரிகிறது. இதனால் விரக்தியடைந்த நிதின் தனக்குக் கிடைக்காத
 
காதலிக்க மறுத்த பெண் – பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய கேரள வாலிபர் !

கேரளாவில் தன்னைக் காதலிக்க மறுத்த பெண் ஒருவரை இளைஞர் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திய சம்பவம் நடந்துள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நிதின் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார். இவர் தங்கள் ஊருக்கு அருகே உள்ள காக்கநாடு எனும் பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவரை ஒருதலை பட்சமாகக் காதலித்து வந்துள்ளார். அவரிடம் பலமுறை தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அந்த பெண் நிதினின் காதலை ஏற்கவில்லை எனத் தெரிகிறது.

இதனால் விரக்தியடைந்த நிதின் தனக்குக் கிடைக்காத அந்த பெண் வேறு யாருக்கும் கிடைக்கக் கூடாது என முடிவெடுத்து அவரைக் கொலை செய்ய திட்டமிட்டு அவரது வீட்டருகே சென்றுள்ளார். அப்போது எங்கோ சென்றுவிட்டு வீட்டுக்குத் திரும்பிய அந்த பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றி கொளுத்தியுள்ளார். பின்னர் தானும் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்திக் கொண்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் தீக்காயங்களோடு தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News