×

திருமணத்திற்கு மறுத்த காதலி – கத்தியால் குத்தி தீ வைத்த வாலிபர்

Boy killed girl friend – திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண்ணை கத்தியால் குத்தியதோடு, தீ வைத்தும் அவரை வாலிபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநில கொச்சியை சேர்ந்தவர் நிதிஷ். அதேபோல் திருச்சூரை சேர்ந்த நீத்து. இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று அதிகாலை நீத்துவை சந்திக்க அவரின் விட்டுக்கு நிதிஷ் வந்துள்ளார். அப்போது, வீட்டின் வரவேற்பரையில் அவர்கள் இருவரும் சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். திடீரென
 
திருமணத்திற்கு மறுத்த காதலி – கத்தியால் குத்தி தீ வைத்த வாலிபர்

Boy killed girl friend – திருமணத்திற்கு மறுத்ததால் இளம்பெண்ணை கத்தியால் குத்தியதோடு, தீ வைத்தும் அவரை வாலிபர் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநில கொச்சியை சேர்ந்தவர் நிதிஷ். அதேபோல் திருச்சூரை சேர்ந்த நீத்து. இவர்கள் இருவரும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்ததாக தெரிகிறது.

திருமணத்திற்கு மறுத்த காதலி – கத்தியால் குத்தி தீ வைத்த வாலிபர்

இந்நிலையில், நேற்று அதிகாலை நீத்துவை சந்திக்க அவரின் விட்டுக்கு நிதிஷ் வந்துள்ளார். அப்போது, வீட்டின் வரவேற்பரையில் அவர்கள் இருவரும் சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். திடீரென ஆத்திரமடைந்த நிதீஷ் கத்தியால் நீத்துவை சரமாரியாக குத்தியுள்ளார். அதன் பின்னரும் ஆத்திரம் தீராமல் வீட்டிலிருந்த மண்ணெண்ணெயை எடுத்து வந்து நீத்துவின் மீது ஊற்றி தீ வைத்தார்.

நீத்துவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து நிதீஷை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். ஆனால், நீத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

போலீசாரின் விசாரணையில் நிதீஷை காதலித்து வந்த நீத்து திடீரென அவரை விட்டு விலகியுள்ளார். மேலும், வேறு ஒரு வாலிபருடம் பழகி வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து, நீத்துவை சந்திக்க அவரின் வீட்டிக்கு வந்த நிதீஷ், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி அவரை வற்புறுத்தியுள்ளார். ஆனால், நீத்து அதற்கு மறுப்பு தெரிவிக்க ஆத்திரமடைந்து அவரை நிதீஷ் கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News