×

அரை மயக்கத்தில் இருந்த நோயாளி – அத்துமீறிய ஆண் செவிலியர் !

ஹரியானா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அரை மயக்கத்தில் இருந்த பெண் நோயாளியிடம் மருத்துவமனைப் பணியாளர் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளதால் அரைமயக்க நிலையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆண் செவிலியர் ஒருவர் அவரின் ஆடைகளைக் கலைந்து பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இதை அந்த பெண் மயக்கம் தெளிந்ததும் தனது கணவரிடம் சொல்லியுள்ளார்.
 
அரை மயக்கத்தில் இருந்த நோயாளி – அத்துமீறிய ஆண் செவிலியர் !

ஹரியானா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அரை மயக்கத்தில் இருந்த பெண் நோயாளியிடம் மருத்துவமனைப் பணியாளர் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டுள்ளதால் அரைமயக்க நிலையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த ஆண் செவிலியர் ஒருவர் அவரின் ஆடைகளைக் கலைந்து பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார்.

இதை அந்த பெண் மயக்கம் தெளிந்ததும் தனது கணவரிடம் சொல்லியுள்ளார். இதையடுத்து அவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அந்த ஆண் செவிலியரின் மேல் சட்டப்பிரிவு 354ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News