×

பிட் அடிக்க உதவி செய்கிறேன்… நீ எனக்கு ? – மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர் !

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக புகார் கூறியுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம், ஜாஷ்பூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ராஜேஷ் குமார் என்ற ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் அந்த பள்ளியில் அவரிடம் படிக்கும் மாணவிகள் அவர் மேல் பாலியல் புகார்கள் உள்ளிட்ட பல புகார்களைக் கூறியுள்ளனர். இது குறித்து ஒரு மாணவி ‘தேர்வில் வெற்றிப் பெறவேண்டும் என்றால் தினமும் எனக்கு சிக்கன் சமைத்துக் கொண்டுவா’ என்ற சொல்லி அவர்
 
பிட் அடிக்க உதவி செய்கிறேன்… நீ எனக்கு ? – மாணவிகளிடம் அத்துமீறிய ஆசிரியர் !

சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகளுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லைக் கொடுத்ததாக புகார் கூறியுள்ளனர்.

சத்தீஸ்கர் மாநிலம், ஜாஷ்பூர் பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ராஜேஷ் குமார் என்ற ஆசிரியர் பணிபுரிந்து வருகிறார்.  இந்நிலையில் அந்த பள்ளியில் அவரிடம் படிக்கும் மாணவிகள் அவர் மேல் பாலியல் புகார்கள் உள்ளிட்ட பல புகார்களைக் கூறியுள்ளனர்.

இது குறித்து ஒரு மாணவி ‘தேர்வில் வெற்றிப் பெறவேண்டும் என்றால் தினமும் எனக்கு சிக்கன் சமைத்துக் கொண்டுவா’ என்ற சொல்லி அவர் தொல்லைத் தருவார் என்றும் மற்றொரு மாணவி ‘ என் உடல் ரீதியானத் தேவைகளைப் பூர்த்தி செய்யாவிட்டால் நீ கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும்’ எனக் கூறியதாகவும் கூறியுள்ளனர்.

மேலும் சில மாணவிகளோ ‘ வரலாற்றுப் பாடத்தில் பிட் அடிக்கவேண்டுமென்றால் நான் சொல்வதை செய்யவேண்டும்’ எனவும் சில மாணவிகளுக்கு சொல்போனில் மெசேஜ்கள் அனுப்பியதாகவும் சொல்லியுள்ளனர். ஆனால் இந்த புகார்களை ஆசிரியர் ராஜேஷ் குமார் மறுத்துள்ளார். இந்நிலையில் ஆசிரியர் பற்றிய புகார் சம்மந்தமாக அறிக்கை அளிக்கும் படி பள்ளி நிர்வாகத்திடம் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News