×

பெட்ரோல் – டீசல் விலை உயரும்: வாகன ஓட்டிகளுக்கு ஷாக் கொடுத்த இந்துஸ்தான் பெட்ரோலியம்

ஏற்கனவே தங்கத்தின் விலை உயர்ந்து மக்களை கவலையடைய வைத்துள்ள நிலையில் பெட்ரோல் – டீசல் விலையும் அதிகரிக்கும் என இந்துஸ்தான் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பெட்ரோல் கிணறு மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கச்சா எண்ணெய்யின் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நிச்சயம் கச்சா எண்ணெய்யின் விலை 20% வரை அதிகரிக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு காரணமாக பெட்ரோல் –
 
பெட்ரோல் – டீசல் விலை உயரும்: வாகன ஓட்டிகளுக்கு ஷாக் கொடுத்த இந்துஸ்தான் பெட்ரோலியம்

ஏற்கனவே தங்கத்தின் விலை உயர்ந்து மக்களை கவலையடைய வைத்துள்ள நிலையில் பெட்ரோல் – டீசல் விலையும் அதிகரிக்கும் என இந்துஸ்தான் பெட்ரோலியம் தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பெட்ரோல் கிணறு மீது நடத்தப்பட்ட தாக்குதலால் கச்சா எண்ணெய்யின் உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நிச்சயம் கச்சா எண்ணெய்யின் விலை 20% வரை அதிகரிக்க கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிப்பு காரணமாக பெட்ரோல் – டீசல் விலை அதிகரிக்கலாம் என்று இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது. இதனால் இன்னும் 15 – 20 நாட்களில் பெட்ரோல் – டீசல் விலை உயரக்கூடும் என தெரிகிறது.

மத்திய கிழக்கில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 15 நாட்களின் அடிப்படையில் எரிபொருள் சந்தை விலை நிர்ணயிக்கப்படுகின்றன. ஆனால், தொடர்ச்சியான கச்சா எண்ணெய் விலை உயர்வு நிலையானது அல்ல என்றும் குறிப்பிடப்ப்ட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News