×

லஞ்சம் கொடுக்காததால் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம் – சாலையில் பிரசவித்தப் பெண் !

அரசு மருத்துவமனையில் அனுமதிக்க லஞ்சம் கொடுக்காதக் காரணத்தால் கர்ப்பினி பெண்ணை நிர்வாகம் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது. ஆக்ராவின் அருகே உள்ள லக்கன்பூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஷியாம் சிங் மற்றும் நய்னா தேவி. நய்னா தேவி கர்ப்பமாக இருந்ததை அடுத்து அவரை ஆக்ராவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்க சென்றுள்ளார் ஷியாம் சிங். ஆனால் அங்குள்ள செவிலியர் சரிதா சிங் மற்றும் மருத்துவர் சுப்ரியா ஜெயின் மற்றும் மருந்தாளுனர் சோனு கோயல் ஆகியோர் அவரை
 
லஞ்சம் கொடுக்காததால் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றம் – சாலையில் பிரசவித்தப் பெண் !

அரசு மருத்துவமனையில் அனுமதிக்க லஞ்சம் கொடுக்காதக் காரணத்தால் கர்ப்பினி பெண்ணை நிர்வாகம் வலுக்கட்டாயமாக வெளியேற்றிய சம்பவம் அதிர்ச்சியளித்துள்ளது.

ஆக்ராவின் அருகே உள்ள லக்கன்பூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினர் ஷியாம் சிங் மற்றும் நய்னா தேவி. நய்னா தேவி கர்ப்பமாக இருந்ததை அடுத்து அவரை ஆக்ராவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்க சென்றுள்ளார் ஷியாம் சிங். ஆனால் அங்குள்ள செவிலியர் சரிதா சிங் மற்றும் மருத்துவர் சுப்ரியா ஜெயின் மற்றும் மருந்தாளுனர் சோனு கோயல் ஆகியோர் அவரை அனுமதிப்பதற்கு லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

மிகவும் ஏழ்மையான பொருளாதார சூழ்நிலையில் இருக்கும் ஷியாம் சிங்கால் அவர்கள் கேட்டத் தொகையைக் கொடுக்க முடியவில்லை. அதனால் அவர்கள் நிறைமாதக் கர்ப்பினியான நய்னா தேவியை வலுக்கட்டாயமாக மருத்துவமனையில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து மருத்துவமனைக்கு அருகில் சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் போதே நய்னாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

பிரசவ வலியால் துடிதுடித்த அவருக்கு சாலையில் நடந்து சென்ற சிலப் பெண்களே பிரசவம் பார்த்துள்ளனர். நய்னாதேவிக்கு ஆண்குழந்தைப் பிறந்துள்ளது. இது சம்மந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாக சம்மந்தப்பட்ட மருத்துவர் மற்றும் செவிலியர் மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News