×

இப்படி செய்தால் எப்படி வெற்றி பெற முடியும் ? – தோல்விக்குப் பின் கோஹ்லி கருத்து !

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இந்தியா தோல்விக்கு என்ன காரணம் என இந்திய கேப்டன் கோஹ்லி கருத்துத் தெரிவித்துள்ளார். இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டி நேற்று கொச்சியில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா ஷிவம் துபே மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 170 ரன்களைச் சேர்த்தது. இதைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் 18 ஓவர்களில்
 
இப்படி செய்தால் எப்படி வெற்றி பெற முடியும் ? – தோல்விக்குப் பின் கோஹ்லி கருத்து !

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டியில் இந்தியா தோல்விக்கு என்ன காரணம் என இந்திய கேப்டன் கோஹ்லி கருத்துத் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான இரண்டாவது டி 20 போட்டி நேற்று கொச்சியில் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இந்தியா ஷிவம் துபே மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 170 ரன்களைச் சேர்த்தது.

இதைத் துரத்திய வெஸ்ட் இண்டீஸ் 18 ஓவர்களில் இலக்கை எளிதாக எட்டியது. ஆரம்பத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி பவுலர்கள் ஒரு கட்டத்தில் ரன்களை வாரி வழங்க ஆரம்பித்தனர். புவனேஷ்வர் குமார் வீசிய நான்காவது ஓவரில் விட்ட இரண்டு கேட்ச்களும் இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்தன. இந்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்துப் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி ‘இப்படி பீல்டிங் செய்தால் எவ்வளவு ரன்கள் அடித்தாலும் அது அதிக ரன்கள் அடித்ததாக சொல்லமுடியாது. ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்களை இழந்திருந்தால் வெஸ்ட் இண்டீஸுக்கு அது மிகப்பெரிய பின்னடைவாக இருந்திருக்கும். கிடைத்த வாய்ப்பை வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொண்டனர்.’ எனக் கூறினார்.

கோஹ்லி குறிப்பிட்ட அந்த இரண்டு கேட்ச்களையும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் தவறவிட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News