×

முத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

குஜராத்தில் தனது கணவரிடம் முத்தம் கேட்ட பெண்ணின் நாக்கை அந்த கணவர் வெட்டியுள்ள சம்பவம் நடந்துள்ளது. குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் வசித்து வருபவர் தஸ்லீம் அன்சாரி என்ற பெண். இவரது கணவர் வெகு நாட்களாக வேலைக்குச் செல்லாமல் ஊரைச் சுற்றி வந்ததால் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. வழக்கம் போல சமீபத்தில் இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. அப்போது கோபித்துக் கொண்டு வெளியே சென்ற கணவர் வீட்டுக்கு வந்ததும் அவரை சமாதானப்படுத்தும்
 
முத்தம் கேட்ட மனைவி… நாக்கை அறுத்த கணவன் –குஜராத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

குஜராத்தில் தனது கணவரிடம் முத்தம் கேட்ட பெண்ணின் நாக்கை அந்த கணவர் வெட்டியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் வசித்து வருபவர் தஸ்லீம் அன்சாரி என்ற பெண். இவரது கணவர் வெகு நாட்களாக வேலைக்குச் செல்லாமல் ஊரைச் சுற்றி வந்ததால் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது.

வழக்கம் போல சமீபத்தில் இருவருக்கும் இடையே சண்டை நடந்துள்ளது. அப்போது கோபித்துக் கொண்டு வெளியே சென்ற கணவர் வீட்டுக்கு வந்ததும் அவரை சமாதானப்படுத்தும் விதமாக அவரிடம் முத்தம் கேட்டுள்ளார் மனைவி. அப்போது திடீரென அவர் எதிர் பார்க்காத நேரத்தில் மனைவியின் நாக்கை அறுத்துள்ளார் அந்த நபர்.

வலியால் அலறிய தஸ்லீமாவின் சத்தம் கேட்டு  அருகில் உள்ளவர்கள் தஸ்லீமாவை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்துள்ளனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலிஸார் அந்தப் பெண்ணின் கணவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News