×

ரயிலில் இருந்து மனைவியைத் தள்ளிவிட்ட கணவன் – எதற்காகத் தெரியுமா ?

மும்பையில் தனது இரண்டாவது மனைவியை ரயிலில் சென்றுகொண்டிருக்கும் போது தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார் ஒரு நபர். மும்பையைச் சேர்ந்த சாகர் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவருக்கு ராணி என்ற பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கத்தால் ராணி கர்ப்பமாகியுள்ளார். அதனால் வேறு வழியின்றி ராணியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் கோபித்துக்கொண்ட அவரது முதல் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியான சாகர் ராணியிடம் தற்போது இந்த குழந்தை வேண்டாம்
 
ரயிலில் இருந்து மனைவியைத் தள்ளிவிட்ட கணவன் – எதற்காகத் தெரியுமா ?

மும்பையில் தனது இரண்டாவது மனைவியை ரயிலில் சென்றுகொண்டிருக்கும் போது தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார் ஒரு நபர்.

மும்பையைச் சேர்ந்த சாகர் என்பவருக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் அவருக்கு ராணி என்ற பெண்ணோடு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கத்தால் ராணி கர்ப்பமாகியுள்ளார். அதனால் வேறு வழியின்றி ராணியைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனால் கோபித்துக்கொண்ட அவரது முதல் மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியான சாகர் ராணியிடம் தற்போது இந்த குழந்தை வேண்டாம் என்று அதனைக் கலைக்க சொல்லியுள்ளார். அதற்கு ராணி மறுக்கவே இருவருக்கும் இடையில் வாக்குவாதம் எழுந்துள்ளது. ரயிலில் இருவரும் சென்று கொண்டிருந்தபோது இது சம்மந்தமாக சண்டையிட்டுள்ளனர். அப்போது சாகர் ராணியை வேகமாகத் தாக்கி ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். ரயில் மிகவும் வேகமாக செல்லாததால் ராணி சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளார். இதையடுத்து போலிஸார் சாகரைத் தேடி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News