×

ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை – குற்றவாளிகள் என்கவுண்ட்டர் !

ஹைதராபாத்தில் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஹைதராபாத்தில் சம்ஷாபாத் பகுதியில் கால்நடை மருத்துவராக பணிபுரியும் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என நாடு முழுவதும் குரல்கள் எழுந்தன. இந்நிலையில் குற்றம் நடந்த இடத்துக்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போது அவர்கள் தப்பிக்க
 
ஹைதராபாத் பெண் மருத்துவர் கொலை – குற்றவாளிகள் என்கவுண்ட்டர் !

ஹைதராபாத்தில் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் ஹைதராபாத்தில் சம்ஷாபாத் பகுதியில் கால்நடை மருத்துவராக பணிபுரியும் இளம்பெண் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். அவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என நாடு முழுவதும் குரல்கள் எழுந்தன.

இந்நிலையில் குற்றம் நடந்த இடத்துக்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போது அவர்கள் தப்பிக்க முயன்றதாகவும், போலீசாரின் துப்பாக்கியை பிடிங்கி அவர்கள் சுட முயன்றதால், தற்காப்பிற்காக போலீஸார் அவர்களை சுட்டுக் கொன்றதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமாக ஹைதராபாத் காவலர்கள் முழு விவரத்தையும் இன்னும் அளிக்கவில்லை.

எப்படி இருந்தாலும், ஹைதராபாத் போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு நாடெங்கும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News