×

நானே மனிதத்தின் எதிர்காலம் ; என் மீது புகார் கூறுபவர்கள் முட்டாள்கள் : நித்தியானந்தா அடாவடி

தன் மீது புகார் கூறுபவர்கள் முட்டாள்கள் என நித்தியானந்தா கூறியுள்ளார். பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா தென் அமெரிக்காவின் ஈக்குவடார் நாட்டில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி தனி நாடாக அறிவிக்க அந்நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். அந்நாட்டிற்கு கைலாச நாடு எனவும் பெயர் வைத்தார். ஆனால், அவரின் கோரிக்கையை ஈக்குவடார் அரசு நிராகரித்துவிட்டது. தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. அவரை தேடும் முயற்சியில் கர்நாடகம் மற்றும் குஜராத் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
 
நானே மனிதத்தின் எதிர்காலம் ; என் மீது புகார் கூறுபவர்கள் முட்டாள்கள் : நித்தியானந்தா அடாவடி

தன் மீது புகார் கூறுபவர்கள் முட்டாள்கள் என நித்தியானந்தா கூறியுள்ளார்.

பாலியல் வழக்கில் தேடப்பட்டு வரும் நித்தியானந்தா தென் அமெரிக்காவின் ஈக்குவடார் நாட்டில் உள்ள ஒரு தீவை விலைக்கு வாங்கி தனி நாடாக அறிவிக்க அந்நாட்டு அரசிடம் கோரிக்கை வைத்திருந்தார். அந்நாட்டிற்கு கைலாச நாடு எனவும் பெயர் வைத்தார். ஆனால், அவரின் கோரிக்கையை ஈக்குவடார் அரசு நிராகரித்துவிட்டது.

தற்போது அவர் எங்கே இருக்கிறார் என்பதும் தெரியவில்லை. அவரை தேடும் முயற்சியில் கர்நாடகம் மற்றும் குஜராத் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்தில் சீடர்களிடம் வீடியோ மூலம் பேசிய அவர் கைலாச நாட்டின் பெயரை ஸ்ரீகைலாசா என மாற்றியிருப்பதாகவும், தனக்கு பல நாடுகளிலிருந்து அழைப்பு வருவதால், விரைவில் ஒரு நாட்டில் ஸ்ரீகைலாசா தேசத்தை அமைப்போம் எனவும் பேசினார். மேலும், இதுவரை 12 லட்சம் பேர் தன் நாட்டிற்கு விண்ணப்பித்திருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தற்போது மற்றொரு வீடியோவில் பேசிய அவர் ‘ உண்மையான கைலாசத்தை நான் உருவாக்குவேன். எனது உடலை பயன்படுத்தி பரமசிவன் கைலாசத்தை உருவாக்க முயல்கிறார். கைலாசா என்பது எல்லைகளற்ற ஆன்மிக பெருவெளி. ஒவ்வொரு முறையும் நம் மீது பழிசுமத்தப்படும் போது நாம் நேர்மையானவர்கள் என்பதை நிரூபிக்கிறோம். அதனால், நமது புகழ் உலகம் முழுவதும் உயர்கிறது. நம் மீது நம்பிக்கை அதிகரிக்கிறது. இது பிடிக்காதவர்கள் நம் மீது பழி கூறுகிறார்கள். முட்டாள்தான் அப்படி செய்வார்கள். ஒருவரை தாக்குபவர்கள் சரித்திரம் படைப்பதில்லை. அதை எதிர்கொள்பவர்களே வரலாறு படைக்கிறார்கள்’ என அவர் பேசியுள்ளார்.

நித்தியானந்தா எங்கே என போலீசார் தேடி வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வீடியோவை அவர் வெளியிட்டு வருவது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News