×

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி – 1000 கிலோ குண்டுகளை வீசிய இந்தியா

Attack on Terrorist Camp : புல்வாமா பகுதியில் 40 இந்திய ராணுவ வீரர்களை கொடூரமாக கொன்றதற்கு இந்தியாக கடுமையான பதிலடியை கொடுத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமா எனும் இடத்தில் 40 இந்திய சி.ஆர்.பி. எஃப் வீரர்கள் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து இதற்கு சரியான பதிலடி
 
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி – 1000 கிலோ குண்டுகளை வீசிய இந்தியா

Attack on Terrorist Camp : புல்வாமா பகுதியில் 40 இந்திய ராணுவ வீரர்களை கொடூரமாக கொன்றதற்கு இந்தியாக கடுமையான பதிலடியை கொடுத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமா எனும் இடத்தில் 40 இந்திய சி.ஆர்.பி. எஃப் வீரர்கள் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டனர். இது நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து இதற்கு சரியான பதிலடி கொடுப்போம் என பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தானின் எல்லைப்பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து 12 இந்திய போர் விமானங்கள் அதிரடி தாக்குதல் நடத்தியது. சுமார் 1000 கிலோ எடை கொண்ட குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஸ் இ முகமது தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. மொத்தமாக 3 தீவிரவாத நிலைகள் அழிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்திய விமானப்படை தங்களின் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் ராணுவமும் உறுதி செய்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News