×

இஸ்ரோ விஞ்ஞானி கொலை – ஓரினச்சேர்க்கை காதலன் கைது !

இஸ்ரோ விஞ்ஞானி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உதவியாளரும் ஓரினச்சேர்க்கையாளருமான ஸ்ரீனிவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவைச் சேர்ந்தவர் விஞ்ஞானி சுரேஷ். இவர் இஸ்ரோவில் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய ஹைதராபாத் அமீர்பேட்டை அண்ணப்பூர்ணா குடியிருப்பில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை சம்மந்தமாக விசாரித்து வந்த காவல்துறையினர், சுரேஷின் ஆய்வக உதவியாளர் ஸ்ரீனிவாஸைக் கைது செய்துள்ளனர். விசாரணையில் ஸ்ரீனிவாசுக்கும் சுரேஷுக்கும் இடையில் அலுவல் ரீதியானப் பழக்கத்துக்கு மேலாக ஓரினச்சேர்க்கை உறவு இருந்துள்ளதாக
 
இஸ்ரோ விஞ்ஞானி கொலை – ஓரினச்சேர்க்கை காதலன் கைது !

இஸ்ரோ விஞ்ஞானி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது உதவியாளரும் ஓரினச்சேர்க்கையாளருமான ஸ்ரீனிவாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவைச் சேர்ந்தவர் விஞ்ஞானி சுரேஷ். இவர் இஸ்ரோவில் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய ஹைதராபாத் அமீர்பேட்டை அண்ணப்பூர்ணா குடியிருப்பில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை சம்மந்தமாக விசாரித்து வந்த காவல்துறையினர், சுரேஷின் ஆய்வக உதவியாளர் ஸ்ரீனிவாஸைக் கைது செய்துள்ளனர்.

விசாரணையில் ஸ்ரீனிவாசுக்கும் சுரேஷுக்கும் இடையில் அலுவல் ரீதியானப் பழக்கத்துக்கு மேலாக ஓரினச்சேர்க்கை உறவு இருந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது சம்மந்தமாக ஸ்ரீனிவாஸ் அளித்துள்ள வாக்குமூலத்தில் ‘என்னோடு ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டால் பணம் தருவதாக சுரேஷ் கூறினார். ஆனால் அவர் சொன்னபடி பணம் தரவில்லை. அதனால்தான் அவரைக் கொலை செய்தேன்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News