×

விதிகளை மீறிய லாரி உரிமையாளருக்கு ரூ 1.41 லட்சம் அபராதம் !

டெல்லியில் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட லாரி உரிமையாளருக்கு விதிகளை மீறியதாகக் கூறி 1,41,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் விதிகளை மீறுபவர்களுக்கு அதிகளவில் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அதிக அபராதத் தொகையால் பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன. சென்ற வாரம் லாரி உரிமையாளர் ஒருவர் 70,000 ரூபாய் அபராதம் செலுத்தியதை அடுத்து இப்போது ஒருவர் 1,41,000 ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார். சம்மந்தப்பட்ட லாரி உரிமையாளர்
 
விதிகளை மீறிய லாரி உரிமையாளருக்கு ரூ 1.41 லட்சம் அபராதம் !

டெல்லியில் ராஜஸ்தான் பதிவெண் கொண்ட லாரி உரிமையாளருக்கு விதிகளை மீறியதாகக் கூறி 1,41,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

புதிய மோட்டார் வாகன சட்டம் கடந்த் செப்டம்பர் 1 முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் விதிகளை மீறுபவர்களுக்கு அதிகளவில் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அதிக அபராதத் தொகையால் பல சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

சென்ற வாரம் லாரி உரிமையாளர் ஒருவர் 70,000 ரூபாய் அபராதம் செலுத்தியதை அடுத்து இப்போது ஒருவர் 1,41,000 ரூபாய் அபராதம் செலுத்தியுள்ளார். சம்மந்தப்பட்ட லாரி உரிமையாளர் விதிமுறைகளுக்கு மீறி அதிகளவில் பொருட்களை ஏற்றியதால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதிக எடையை ஏற்றி சென்றதற்கு ரூ.1 லட்சமும், ஒவ்வொரு டன் பொருளுக்கும் 2,000 வீதம் ரூ.41,000 அபராதம் விதிக்கப்படுள்ளது. அந்த அபராத தொகையை லாரி ஓட்டுனர் டெல்லி நீதிமன்றத்தில் செலுத்தி உள்ளார், அது சம்மந்தமான ரசீது சமூக வலைத்தளங்களில் வைரலாகி விவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News