×

என்னை திருமணம் செய்து கொள்.. நடிகையை துப்பாக்கி முனையில் மிரட்டிய வாலிபர்

Actre Ritu Singh -தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நடிகையை ஒருவர் துப்பாக்கியால் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல போஜ்புரி நடிகை ரிதுசிங். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் ஒரு புதிய பட படப்பிற்காக உத்திரபிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளார். அவருக்காக நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. படப்பிடிப்பு முடிந்து அவர் ஹோட்டலுக்கு திரும்பி உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரின் அறை தட்டப்படும் சத்தம் கேட்டது. தூக்க கலக்கத்தில் எழுந்து கதவை திறந்து
 
என்னை திருமணம் செய்து கொள்.. நடிகையை துப்பாக்கி முனையில் மிரட்டிய வாலிபர்

Actre Ritu Singh -தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நடிகையை ஒருவர் துப்பாக்கியால் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல போஜ்புரி நடிகை ரிதுசிங். இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இவர் சமீபத்தில் ஒரு புதிய பட படப்பிற்காக உத்திரபிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளார்.

அவருக்காக நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. படப்பிடிப்பு முடிந்து அவர் ஹோட்டலுக்கு திரும்பி உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரின் அறை தட்டப்படும் சத்தம் கேட்டது. தூக்க கலக்கத்தில் எழுந்து கதவை திறந்து பார்த்த போது அங்கு வாலிபர் ஒரு துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்ததை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

என்னை திருமணம் செய்து கொள்.. நடிகையை துப்பாக்கி முனையில் மிரட்டிய வாலிபர்

உள்ளே நுழைந்த அந்த வாலிபர் துப்பாக்கியை காட்டி அவரை மிரட்டி என்னை திருமணம் செய்து கொள். இல்லையேல் உன்னை சுட்டுக் கொன்று விடுவேன் என மிரட்டியுள்ளார். இதையடுத்து ரிதுசிங் கூச்சல் போட்டுள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையில் இருந்த நபர் அங்கு வந்து அந்த வாலிபரிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது அந்த மர்ம நபர் சுட்டதில் அவர் படுகாயம் அடைந்தார்.

இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அங்கு சென்று சுமார் ஒரு மணி நேரம் போராடி அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர். போலீசாரின் விசாரணையில் அவர் பெயர் பங்கஜ் என்பதும், அவர் மனநிலை சரியில்லாதவர் என்றும் செய்தி வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News