×

மோரில் விஷம் என நாடகம்… ஆனால் மனைவிக் கொடுத்ததோ பால் – கொண்டையை மறைக்க மறந்த கணவன் !

ஆந்திராவில் தனது மனைவி கொடுத்த மோரில் விஷம் கலந்து கொடுத்ததாகக் கூறி நாடகமாடிய கணவன் சிக்கியுள்ளார். ஆந்திரா மாநிலம் ஜோனகிரி கிராமத்தைச் சேர்ந்த லிங்கையா என்பவருக்க்கும் நாகமணி என்பவருக்கும் இரு வாரங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. அதையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் மணமக்களுக்கு பெண் வீட்டில் விருந்து வைக்கப்பட்டுள்ளது. அப்போது லிங்கையா திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அவரிடம் பெற்ற வாக்குமூலத்தில் தனது மனைவி கொடுத்த மோரில் விஷம்
 
மோரில் விஷம் என நாடகம்… ஆனால் மனைவிக் கொடுத்ததோ பால் – கொண்டையை மறைக்க மறந்த கணவன் !

ஆந்திராவில் தனது மனைவி கொடுத்த மோரில் விஷம் கலந்து கொடுத்ததாகக் கூறி நாடகமாடிய கணவன் சிக்கியுள்ளார்.

ஆந்திரா மாநிலம் ஜோனகிரி கிராமத்தைச் சேர்ந்த லிங்கையா என்பவருக்க்கும் நாகமணி என்பவருக்கும் இரு வாரங்களுக்கு முன்னர் திருமணம் நடந்துள்ளது. அதையடுத்து இரு தினங்களுக்கு முன்னர் மணமக்களுக்கு பெண் வீட்டில் விருந்து வைக்கப்பட்டுள்ளது. அப்போது லிங்கையா திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அதையடுத்து அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அவரிடம் பெற்ற வாக்குமூலத்தில் தனது மனைவி கொடுத்த மோரில் விஷம் கலந்திருந்ததாக சொல்லியுள்ளார். இது சம்மந்தமாக அவர் மனைவியிடம் நடத்திய விசாரணையில் தன் கணவருக்கு பால்தான் கொடுத்ததாக சொல்லி அந்த டம்ளரையும் காட்டியுள்ளார்.

இதையடுத்து லிங்கையாவிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் அவருக்கு கல்யாணத்துக்கு முன்னெரே வேறு ஒரு பெண்ணுடன் காதல் இருந்ததாகவும் ஆனால் அவரை திருமணம் செய்ய பெண்ணின் பெற்றோர் சம்மதிக்காததால் நாகமணியை திருமணம் செய்ததாகவும் கூறியுள்ளார். மேலும் அவரை திருமணம் செய்யவே மனைவி மேல் கொலைப்பழி சுமத்த நாடகம் ஆடியதாக ஒத்துக்கொண்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News