×

மருத்துவர்களை தாக்கினால் 10 வருடம் சிறை – வருகிறது புதிய சட்டம்

பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. மருத்துவமனைகளில் நோயாளிகள் இறக்கும் போது நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்களை தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே, இதை தடுக்கும் விதமாக புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதை ஏற்று ஒரு புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பணியில் உள்ள மருத்துவர் மற்றும் பணியாளர்களை தாக்கி காயம் ஏற்படுத்தினால்
 
மருத்துவர்களை தாக்கினால் 10 வருடம் சிறை – வருகிறது புதிய சட்டம்

பணியில் உள்ள மருத்துவர்களை தாக்கினால் 10 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது.

மருத்துவமனைகளில் நோயாளிகள் இறக்கும் போது நோயாளியின் உறவினர்கள் மருத்துவர்களை தாக்கும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. எனவே, இதை தடுக்கும் விதமாக புதிய சட்டத்தை கொண்டு வர வேண்டும் என மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மருத்துவர்களை தாக்கினால் 10 வருடம் சிறை – வருகிறது புதிய சட்டம்

இதை ஏற்று ஒரு புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, பணியில் உள்ள மருத்துவர் மற்றும் பணியாளர்களை தாக்கி காயம் ஏற்படுத்தினால் 3 முதல் 10 ஆண்டு வரை தண்டனையும் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மருத்துவமனையில் சேதம் விளைவித்தால் 6 மாதம் முதல் 5 ஆண்டு வரை சிறைத்தண்டனையும் அளிக்கப்படும் வகையில் இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த மசோதாவை விரைவில் பாராளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News