×

பெண் சீடர் பாலியல் வன்கொடுமை: நித்தியானந்தாவுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்!

பெண் சீடரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது கர்நாடக நீதிமன்றம். நித்தியானந்தாவின் ஆசிரிமம் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ளது. இங்கு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்த அமெரிக்காவை சேர்ந்த இந்திய பெண்ணை பாலியல் வன்க்கொடுமை செய்ததாக நித்தியானந்தா மீது புகார் எழுந்தது. மேலும் பெண் சீடருடன் நித்தியானந்தா தகாத உறவில் ஈடுபட்ட வீடியோவும் வெளியாகி குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் கர்நாடகாவில் ராமநகரா கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ்
 
பெண் சீடர் பாலியல் வன்கொடுமை: நித்தியானந்தாவுக்கு ஜாமீன் இல்லா பிடிவாரண்ட்!

பெண் சீடரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது கர்நாடக நீதிமன்றம்.

நித்தியானந்தாவின் ஆசிரிமம் கர்நாடக மாநிலம் பிடதியில் உள்ளது. இங்கு ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக தங்கியிருந்த அமெரிக்காவை சேர்ந்த இந்திய பெண்ணை பாலியல் வன்க்கொடுமை செய்ததாக நித்தியானந்தா மீது புகார் எழுந்தது. மேலும் பெண் சீடருடன் நித்தியானந்தா தகாத உறவில் ஈடுபட்ட வீடியோவும் வெளியாகி குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் கர்நாடகாவில் ராமநகரா கூடுதல் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நேரில் ஆஜராகவில்லை என்றால் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என கடந்த மாதம் 8-ஆம் தேதி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். ஆனால் நித்தியானந்தா கடந்த ஜூன் 6-ஆம் தேதி முதல் தற்போது வரை நீதிமன்றத்தில் ஆஜராகமால் இருக்கிறார்.

இந்நிலையில் நேற்று முந்தினம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது நித்தியானந்தா நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்குமாறு அவரது வழக்கறிஞர் மனுதாக்கல் செய்தார். இதனை ஏற்க மறுத்த நீதிபதி தொடர்ந்து 3-வது முறையாக விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்ததற்காக நித்தியானந்தாவுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News