×

ஒரே நேரத்தில் 3 அரசு பணிகளில் பணி – 30 வருடங்களாக சம்பளம் வாங்கிய பலே ஆசாமி

Man work in three govt job and got salary – ஒரே நபர் மூன்று அரசு வேலைகளில் மாறி மாறி வேலை செய்து 30 வருடங்களாக ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. அரசு பணி என்பது பலருக்கும் கனவாக இருக்கிறது. அதை பெற பல தேர்வுகளை எழுதி அதில் சிலர் மட்டுமே தேர்ச்சி பெற்று அரசு பணியை பெறுகிறார்கள். பலருக்கும் அது கடைசி வரையில் கனவாகவே போய் விடுகிறது. இந்நிலையில், ஒரே நபர் மூன்று அரசு
 
ஒரே நேரத்தில் 3 அரசு பணிகளில் பணி – 30 வருடங்களாக சம்பளம் வாங்கிய பலே ஆசாமி

Man work in three govt job and got salary – ஒரே நபர் மூன்று அரசு வேலைகளில் மாறி மாறி வேலை செய்து 30 வருடங்களாக ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது.

அரசு பணி என்பது பலருக்கும் கனவாக இருக்கிறது. அதை பெற பல தேர்வுகளை எழுதி அதில் சிலர் மட்டுமே தேர்ச்சி பெற்று அரசு பணியை பெறுகிறார்கள். பலருக்கும் அது கடைசி வரையில் கனவாகவே போய் விடுகிறது.

இந்நிலையில், ஒரே நபர் மூன்று அரசு பணிகளில் பணியாற்றி சம்பளம் பெற்று வந்தது தற்போது தெரியவந்துள்ளது. சமீபத்தில் மத்திய அரசு ஒருங்கிணைந்த நிதி மேலாண்மை முறையை கொண்டு வந்தது. அப்போது பீகார் மாநிலம் கிருஷ்ணகஞ்ச் பகுதியில் வசிக்கும் சுரேஷ்ராம் என்பவர் மூன்று வெவ்வேறு அரசு துறைகளில் பணிபுரிந்தது தெரியவந்தது.

அரசுப்பணியில் ஒரே பெயர் கொண்ட நபர் பணியாற்றுவது சகஜம் என்றாலும், ஒரே பெயர், ஒரே விலாசம் என்பது அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பணி தொடர்பான ஆவணங்கள் மற்றும் தகுந்த ஆதாரங்களுடன் தங்களை சந்திக்குமாறு அதிகாரிகள் அவருக்கு உத்தரவிட உஷார் ஆன சுரேஷ்ராம் தலைமறைவானார். போலீசார் அவரை கைது செய்து விசாரணை செய்த போது 30 வருடங்களாக அவர் வெவ்வேறு அரசு பணிகளில் பணிபுரிந்து சம்பளம் வாங்கியதும், அதில் பதவி உயர்வுகளை அவர் பெற்றதும் தெரிய வந்தது.

இது தொடர்பாக அதிகாரிகள் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News