×

விபத்தில் இறந்த ஆட்டுக்காக போராடிய மக்கள் – ரூ 2.68 கோடி நஷ்டம் என புகார் கொடுத்துள்ள சுரங்கம் !

ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்துக்கு சொந்தமான லாரியில் அடிபட்டு இறந்த ஆட்டுக்காக நஷ்ட ஈடு கேட்டு மக்கள் போராடினர். ஒடிசாவில் மகாநதி நிலக்கரி உற்பத்தி சுரங்க நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான தால்செர் நிலக்கரி சுரங்கத்தில் லாரி ஒன்று நிலக்கரியை ஏற்றிக்கொண்டு வந்தபோது அப்பகுதியில் உள்ள ஆட்டின் மேல் மோதி ஆடு உயிரிழந்தது. இதற்காக 60,000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டுமெனக் கூறி அந்த ஆட்டின் உரிமையாளர் மற்றும் ஊர்மக்கள் லாரிகளை மறித்துப் போராடினர். கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம்
 
விபத்தில் இறந்த ஆட்டுக்காக போராடிய மக்கள் – ரூ 2.68 கோடி நஷ்டம் என புகார் கொடுத்துள்ள சுரங்கம் !

ஒடிசாவில் நிலக்கரி சுரங்கத்துக்கு சொந்தமான லாரியில் அடிபட்டு இறந்த ஆட்டுக்காக நஷ்ட ஈடு கேட்டு மக்கள் போராடினர்.

ஒடிசாவில் மகாநதி நிலக்கரி உற்பத்தி சுரங்க நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்துக்கு சொந்தமான தால்செர் நிலக்கரி சுரங்கத்தில் லாரி ஒன்று நிலக்கரியை ஏற்றிக்கொண்டு வந்தபோது அப்பகுதியில் உள்ள ஆட்டின் மேல் மோதி ஆடு உயிரிழந்தது.

இதற்காக 60,000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டுமெனக் கூறி அந்த ஆட்டின் உரிமையாளர் மற்றும் ஊர்மக்கள் லாரிகளை மறித்துப் போராடினர். கிட்டத்தட்ட மூன்றரை மணிநேரம் நடந்த அந்த போராட்டம் பேச்சுவார்த்தைக்குப் பின் கைவிடப்பட்டது.

இதையடுத்து மகாநதி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் போராட்டத்தால் ஏற்பட்ட நிலக்கரி போக்குவரத்துத் தடையால் 2.68 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் அனுமதி இன்றி மக்கள் போராடியதால் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News