×

பிரதமருக்குப் பொருளாதாரம் புரியாது – சுப்ரமண்ய சுவாமி தடாலடி !

இந்திய பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் புரியாது என பாஜக முன்னணி தலைவர் சுபரமண்ய சுவாமி தெரிவித்துள்ளார். நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வு, ஆட்டோ மொபல் துறையின் வீழ்ச்சி என பொருளாதாரம் மந்தமாகியுள்ளது. ஆனால் பாஜக அமைச்சர்களோ பொறுப்பற்ற பதில்களைக் கூறி வருகின்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமண்ய சுவாமி இதுகுறித்துப் பேசியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர் ‘வெங்காய விலை உயர்வு என்பது நமது தோல்விதான். பொருளாதாரக் கொள்கைகளை சரியாக நிறைவேற்றவில்லை. மக்களின் கைகளில்
 
பிரதமருக்குப் பொருளாதாரம் புரியாது – சுப்ரமண்ய சுவாமி தடாலடி !

இந்திய பிரதமர் மோடிக்கு பொருளாதாரம் புரியாது என பாஜக முன்னணி தலைவர் சுபரமண்ய சுவாமி தெரிவித்துள்ளார்.

நாட்டில் வெங்காயத்தின் விலை உயர்வு, ஆட்டோ மொபல் துறையின் வீழ்ச்சி என பொருளாதாரம் மந்தமாகியுள்ளது. ஆனால் பாஜக அமைச்சர்களோ பொறுப்பற்ற பதில்களைக் கூறி வருகின்றனர். இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்ரமண்ய சுவாமி இதுகுறித்துப் பேசியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர் ‘வெங்காய விலை உயர்வு என்பது நமது தோல்விதான். பொருளாதாரக் கொள்கைகளை சரியாக நிறைவேற்றவில்லை. மக்களின் கைகளில் பணம் இல்லை. பணம் இருந்தாலும் அதனை செலவு செய்யப் பயப்படுகிறார்கள். அதற்காக வருமான வரியை ரத்துசெய்ய வேண்டும். அப்படி செய்தால் நம்முடைய பொருளாதார அமைப்பு சரியாகிவிடும். வெங்காய விலை பற்றி நிர்மலா சீதாராமனிடம் கேளுங்கள். பொருளாதாரத்தின் நிலை குறித்து 7முறை பிரதமருக்கு கடிதம் எழுதினேன். பிரதமருக்கு பொருளாதாரம் புரியவேண்டும், அவருக்கு பொருளாதாரம் புரியாது. பொருளாதாரம் மாற்றம் வந்தால் தான் இது எல்லாம் சரியாகும்’ எனக் கூறியுள்ளார்.

பிரதமர் மற்றும் நிதியமைச்சரைப் பற்றி பாஜக தலைவர் ஒருவரே இப்படி பேசியிருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News