×

அட செமையா இருக்கே!… ராகுலின் பேச்சை சிறப்பாக மொழிபெயர்த்த அரசு பள்ளி மாணவி… வைரல் வீடியோ

கேரள அரசு பள்ளி மாணவி ஒருவர் காங்கிரஸ் தலைவர் ராகுலின் பேச்சை சிறப்பாக மொழி பெயர்த்த வீடியோ வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரள மாநிலம் வயநாடு சென்றுள்ளார். அப்போது கருவரக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட அறிவியல் வளாகத்தை அவர் திறந்து வைத்தார். அப்போது, பள்ளி மாணவிகள் முன்பு அவர் உரையாற்றினார். அப்போது, தனது பேச்சை யார் மொழி பெயர்க்க முன் வருகிறீர்கள் என அவர் மாணவிகள் முன்பு கேட்டபோது, பிளஸ் டூ
 
அட செமையா இருக்கே!… ராகுலின் பேச்சை சிறப்பாக மொழிபெயர்த்த அரசு பள்ளி மாணவி… வைரல் வீடியோ

கேரள அரசு பள்ளி மாணவி ஒருவர் காங்கிரஸ் தலைவர் ராகுலின் பேச்சை சிறப்பாக மொழி பெயர்த்த வீடியோ வெளியாகியுள்ளது.

ராகுல் காந்தி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரள மாநிலம் வயநாடு சென்றுள்ளார். அப்போது கருவரக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட அறிவியல் வளாகத்தை அவர் திறந்து வைத்தார். அப்போது, பள்ளி மாணவிகள் முன்பு அவர் உரையாற்றினார்.

அப்போது, தனது பேச்சை யார் மொழி பெயர்க்க முன் வருகிறீர்கள் என அவர் மாணவிகள் முன்பு கேட்டபோது, பிளஸ் டூ மாணவி சஃபா துணிச்சலுடன் முன்வந்தார். அதோடு, ராகுலின் பேச்சை சிறப்பாக மலையாளத்தில் மொழிபெயர்த்து ராகுல் மற்றும் மாணவ, மாணவியர் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டை பெற்றார்.

இந்த வீடியோவை ராகுல் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து ‘கேரளாவின் ஆற்றல்’ என பதிவிட்டுள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News