×

பதவியேற்பு விழாவில் ரஜினி, கமல் – மோடியின் அடுத்த திட்டம் ?

தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுத்துள்ளது அரசியல் களத்தில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது. 17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றியுள்ளது பாஜக. இதையடுத்து நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி வரும் 30 ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார். மோடியின் பதவியேற்பு விழா மிக விமரிசையாக நடக்க இருக்கிறது. இதில் பல தேசிய தலைவர்கள் மற்றும் சர்வதேசத் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்தவிழாவில் கலந்துகொள்ள நடிகரும் மோடியின் நண்பருமான ரஜினிக்கு அழைப்பு
 
பதவியேற்பு விழாவில் ரஜினி, கமல் –  மோடியின் அடுத்த திட்டம் ?

தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுத்துள்ளது அரசியல் களத்தில் சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

17 ஆவது மக்களவைத் தேர்தலில் 350 இடங்களைக் கைப்பற்றியுள்ளது பாஜக. இதையடுத்து நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி வரும் 30 ஆம் தேதி பதவியேற்க இருக்கிறார்.

மோடியின் பதவியேற்பு விழா மிக விமரிசையாக நடக்க இருக்கிறது. இதில் பல தேசிய தலைவர்கள் மற்றும் சர்வதேசத் தலைவர்கள் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்தவிழாவில் கலந்துகொள்ள நடிகரும் மோடியின் நண்பருமான ரஜினிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இப்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் காலூன்ற பாஜக தினறிவரும் வேளையில் ரஜினி, கமல் ஆகிய இருவரையும் தங்கள் பி டீமாக அமைத்து வேலை செய்வதாகக் கருத்துகள் எழுந்துள்ளன.  இந்நிலையில் இந்த அழைப்பு அந்த சந்தேகங்களை உறுதி செய்வதாக உள்ளது. ஆனால் ரஜினியும் , கமலும் இதுவரை விழாவிற்கு செல்வது குறித்து பதில் எதுவும் சொல்லவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News