×

மயக்கிய டிரைவர், கண்ணை மறைத்த காதல்; தந்தைக்கு எமனான ஒரே மகள்!

தன்னுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலருடன் சேர்ந்து தந்தையை மகள் கொன்றது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்த சஜீவ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவியும் மகளும் கேரளாவில் வசித்து வந்துள்ளனர். ஒரே மகள் என்பதல் மிகவும் செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். தனியார் கல்லூரியில் படித்து வந்த மகள் கல்லூரி பஸ்ஸில் சென்று வந்துள்ளார். அப்போது பஸ் டிரைவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாய் கண்டித்தும் கேட்காமல் காதல்
 
மயக்கிய டிரைவர், கண்ணை மறைத்த காதல்; தந்தைக்கு எமனான ஒரே மகள்!

தன்னுடைய காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் காதலருடன் சேர்ந்து தந்தையை மகள் கொன்றது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவில் பத்தனம் திட்டா பகுதியை சேர்ந்த சஜீவ் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவியும் மகளும் கேரளாவில் வசித்து வந்துள்ளனர். ஒரே மகள் என்பதல் மிகவும் செல்லமாக வளர்த்து வந்துள்ளனர். தனியார் கல்லூரியில் படித்து வந்த மகள் கல்லூரி பஸ்ஸில் சென்று வந்துள்ளார்.

அப்போது பஸ் டிரைவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாய் கண்டித்தும் கேட்காமல் காதல் வளர்த்து வந்துள்ளார். இதனிடையே தந்தை வெளிநாட்டில் இருந்து வந்த நிலையில் மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனால், இதனை மீறி வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொண்டு டிரைவருடன் ஓடிவிட்டாள்.மயக்கிய டிரைவர், கண்ணை மறைத்த காதல்; தந்தைக்கு எமனான ஒரே மகள்!இது குறித்து போலீஸ் விசாரணை நடத்திய போது இருவரும் மேஜர் என்பதால் போலீஸாராலும் இதை எதுவும் செய்ய இயலவில்லை. ஆனால், சஜீவ் அவ்வப்போது தனது மகள் திருமணம் செய்துக்கொண்ட டிரைவருடன் பிரச்சனை செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மகள் திட்டம் போட்டு, அவள் அவளது காதல் கணவன் மற்றும் கணவனின் நண்பர் ஆகியோருடன் சேர்ந்து சஜீவை அடித்து உதைத்துள்ளார்.

இதனால் பலத்த காயமடைந்த சஜீதை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News